17ஆவது லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு
Recommended Video
டெல்லி: 17ஆவது லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா (57) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் நேற்று முன் தினமும், நேற்றைய தினமும் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் இன்றைய தினம் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதில் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லாவை தேர்வு செய்ய ஆளும் கட்சி முடிவு செய்தது. இன்று நாடாளுமன்ற அவை கூடியபோது ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன் மொழிந்தார்.
இதைத் தொடர்ந்து ஓம் பிர்லாவுக்கு அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும், திமுகவும் முழு ஆதரவு தந்ததை அடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை இருப்பிடம் சென்று அழைத்து வந்த பிரதமர் மோடி, சபாநாயகருக்கான இருக்கைக்கு அழைத்து சென்று அமரவைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசினார். இதையடுத்து அமைச்சர்களை ஓம் பிர்லாவுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications