ஓம் பிர்லா VS சுரேஷ்.. லோக்சபா சபாநாயகர் தேர்தலில் வெற்றி யாருக்கு? ‛இந்தியா’ கூட்டணிக்கு பின்னடைவு
டெல்லி: இந்திய வரலாற்றில் முதல் முறையாக லோக்சபா சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. பாஜக கூட்டணியில் ஓம்பிர்லாவும், ‛இந்தியா' கூட்டணியில் கொடிக்குன்னில் சுரேசும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் யார் வெல்வார்கள்? இருவருக்கு எத்தனை எம்பிக்களின் ஆதரவு உள்ளது? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
7 கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 543 தொகுதிகள் உள்ள நிலையில் தனிமெஜாரிட்டிக்கு 272 இடங்கள் தேவை. ஆனால் தனிமெஜாரிட்டி யாருக்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறிய பாஜக தனது கூட்டணியில் உள்ள 53 எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது.

மீண்டும் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார். கடந்த 2014, 2019ல் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கூட மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கான தனி மெஜாரிட்டியை பிடித்து இருந்தது. ஆனால் இந்த முறை கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் பாஜக 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய வேண்டி உள்ளது.
இதனால் இந்த முறை வழக்கத்தை விட கூட்டணி கட்சிகளின் எம்பிக்களுக்கு மத்திய அமைச்சரவையில் அதிக இடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் ராஜஸ்தான் கோட்டா தொகுதி எம்பியான ஓம்பிர்லா சபாநாயகர் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார். ‛இந்தியா' கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி (மாவெளிக்கெரே தொகுதி)கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை சபாநாயகர் என்பவர்கள் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முதல் முறையாக போட்டி நிலவுகிறது. இதனால் இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலை இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி நடத்த உள்ளார். இதனால் இந்த தேர்தல் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி இன்று காலை லோக்சபாவில் சபாநாயகர் தேர்தல் என்பது நடைபெற உள்ளது. சிம்பிள் மெஜாரிட்டி அடிப்படையில் வாக்கெடுப்பு முறையில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது லோக்சபாவில் மொத்தம் 543 எம்பிக்கள் உள்ளனர். இதில் 7 பேர் இன்னும் பதவியேற்காத நிலையில் அவர்களால் ஓட்டளிக்க முடியாது. இது ‛இந்தியா' கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் ஓட்டளிக்க முடியாத 7 பேரில் 5 பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களாகவும், 2 பேர் சுயேச்சைகளாகவும் உள்ளனர். இது ‛இந்தியா' கூட்டணிக்கு சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனென்றால் இவர்கள் 7 பேரை தவிர்த்தால் லோக்சபாவில் 536 எம்பிக்கள் மட்டுமே வாக்காளர்களாக இருப்பார்கள். இதில் சிம்பிள் மெஜாரிட்டி என்றால் சபாநாயகர் தேர்தலில் களமிறங்கி உள்ள ஓம்பிர்லா மற்றும் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோருக்கு 268 எம்பிக்களின் ஆதரவு வேண்டும்.
இதில் பாஜகவுக்கு 240 எம்பிக்கள், அதன் கூட்டணிக்கு 53 எம்பிக்கள் என்று மொத்தம் 293 பேர் உள்ளனர். மேலும் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 4 எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஓம்பிர்லாவுக்கு ஆதரவாக 297 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. இதனால் அவர் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மாறாக ‛இந்தியா' கூட்டணிக்கு மொத்தம் 236 எம்பிக்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 98 எம்பிக்கள் (ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் 99 என்ற இடம் 98 என்று குறைக்கப்பட்டுள்ளது) உள்ளனர். இதில் 7 எம்பிக்கள் இன்னும் பதவியேற்கவில்லை. இதனால் பதவியேற்காத 2 சுயேச்சைகள் தவிர்த்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை என்பது 221 என்ற அளவில் மட்டுமே உள்ளது. இதனால் இன்றைய தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம்பிர்லாவே மீண்டும் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications