ஆட்டம் கண்ட ஓம் பிர்லா.. திடீரென எடுத்த முடிவு! எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு ஏற்பட்ட சங்கடம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்கவில்லை என்று, சபாநாயகர் ஓம் பிர்லா மீது இந்தியா கூட்டணி எம்பிக்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். மட்டுமல்லாது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில், ஓம் பிர்லா எடுத்திருக்கும் முடிவு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, மக்களவையில் சலசலப்புகள், பஞ்சாயத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசிய விஷயங்களை மத்திய அரசு அவ்வளவாக ரசிக்கவில்லை.

Om Birla

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இதனால் எதிர்க்கட்சிகள் மீது ஆளும் கட்சி எம்பிக்களும், ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சி எம்பிக்களும் மாறி மாறி விமர்சித்து வருகிறது. இப்படி இருக்கையில், இந்த விவகாரம் குறித்து ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கின்றன.

இந்த தீர்மானம் குறித்து இறுதி முடிவு எட்டப்படும் வரை மக்களவையின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

சபாநாயகர் இருக்கை

நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்பட்டு, ஒரு தீர்வு கிடைக்கும் வரை சபாநாயகர் இருக்கையில் அமரப் போவதில்லை என்றும் பிர்லா முடிவெடுத்துள்ளார். தீர்மானம் நிறைவேறும் வரை சபாநாயகரை நீக்க வேண்டும் என்று எந்தச் சட்ட விதியும் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.

காங்கிரஸ் எம்பிக்கள்

மொத்தம் 118 எம்.பி.க்களின் கையெழுத்துகளுடன் கூடிய நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவை பொதுச்செயலாளர் உத்பல் குமார் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸ் தலைவர்களான கே. சுரேஷ், கவுரவ் கோகோய், முகமது ஜாவித் ஆகியோர் அரசியலமைப்புச் சட்டத்தின் 94(சி) பிரிவின் கீழ் இதை வழங்கினர்.

ஓம் பிர்லா

சபாநாயகர் பிர்லா, நம்பிக்கையில்லா தீர்மான அறிவிப்பை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை பொதுச்செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பிரத்யேகமாக பெற்ற தீர்மான தகவலின்படி, மக்களவை நடவடிக்கைகளில் வெளிப்படையான ஒருதலைப்பட்சமான போக்கு நிலவுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் மீண்டும் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பதாகும் என்றும் தீர்மானம் குறிப்பிடுகிறது.

அண்மையில் நடந்த நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது ராகுல் காந்தி தன் உரையை முழுமையாக முடிக்க அனுமதிக்கப்படாதது மற்றும் எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகளையும் இந்த கடிதம் சுட்டிக்காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+