கொரோனா கால கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிப்பு- மத்திய அரசு
டெல்லி: ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் கொரோனா கால கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதித்த கொரோனா கால கட்டுப்பாடுகள் மாதந்தோறும் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போதைய நிலையில் 578 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போதைய கட்டுப்பாடுகள் டிசம்பர் 31-ந் தேதி வரை அமலில் உள்ளன.

இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தற்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா கால கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் நிலையில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவைகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்தலாம்.
பண்டிகை காலங்களில் கூட்டங்களைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188-க் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல மாநிலங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ், உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டங்கள் அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்கலாம். அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி போடுதல் ஆகியவற்றையும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications