Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓமிக்ரான் அறிகுறிகள் என்னென்ன? எவ்வளவு ஆபத்து? புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ள உருமாறிய கொரோனா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓமிக்ரான் உருமாறிய கொரோனா குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதன் அறிகுறிகள் என்னவாக உள்ளன என்பது குறித்து ஆய்வாளர்கள் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil

    கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தான். கடந்த காலங்களில் உருமாறிய வைரஸ் தான் கொரோனா அலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    இதனால் ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை உலக நாடுகள் எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன. இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே வெளிநாட்டினருக்குத் தடை விதிப்பதாக அறிவித்து விட்டன.

    ஓமிக்ரான் கொரோனா

    ஓமிக்ரான் கொரோனா

    இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.

    தீவிர பாதிப்பு இல்லை

    தீவிர பாதிப்பு இல்லை

    அதேநேரம் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த ஓமிக்ரான் கொரோனா தீவிர பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும், ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்த முக்கிய அறிகுறிகள் குறித்த தகவல்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

    அறிகுறிகள் என்ன

    அறிகுறிகள் என்ன

    ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மிகவும் சோர்வாக உணர்கின்றனர். குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் கடும் சோர்பு ஏற்படுகிறது எனக் கூற முடியாது. ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து வயதினருக்கும் கடுமையான சோர்வு ஏற்படுவதாக தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்துள்ளார்.

    ஆக்சின் குறைவு இல்லை

    ஆக்சின் குறைவு இல்லை

    அதேபோல இந்த ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலின் ஆக்சிஜன் அளவு பெரியளவில் குறையவில்லை. இது மிகவும் நல்ல ஒரு செய்தியாகும். ஏனென்றால் டெல்டா உருமாறிய கொரோனா வைரசால் இந்தியாவில் 2ஆம் அலை ஏற்பட்ட போது, பல நோயாளிகளின் உடலிலும் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்தது. இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் கூட சிலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    சுவை மற்றும் வாசனை இழப்பு

    சுவை மற்றும் வாசனை இழப்பு

    அதேபோல மற்ற உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக்கு சுவை மற்றும் வாசனை இழப்பு ஏற்பட்டது. இது கொரோனாவின் முக்கிய அறிகுறியாக இருந்தது. இருப்பினும், தற்போது ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுவை மற்றும் வாசனை இழப்பு ஏற்படுவதில்லை. அதேநேரம் ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொண்டையில் அரிப்பு போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் புகார் அளித்துள்ளனர்.

    வரும் காலங்கள்

    வரும் காலங்கள்

    அனைத்தையும் விட முக்கியமாக ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவ்வித மருத்துவமனை சிகிச்சையும் இல்லாமல் குணமடைந்து வருவதாகத் தென் ஆப்பிரிக்கா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த உருமாறிய கொரோனாவை கண்டறிந்து சில நாட்கள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் வரும் காலங்களில் ஓமிக்ரான் கொரோனா குறித்துப் பல புதிய தகவல்கள் தெரிய வரும் என்றும் ஆ்யவாளர்கள் தெரிவித்தனர்.

    12 நாடுகள்

    12 நாடுகள்

    தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா இதுவரை ஹாங்காங், போட்ஸ்வானா, ஆஸ்திரேலியா உட்பட குறைந்தபட்சம் 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவும் என்றும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கத் தொற்றுநோய் வல்லுநர் ஆண்டனி பவுசி கூறியது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+