ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு: பிரதமர் மோடியின் அமீரக பயணம் திடீர் ரத்து!
டெல்லி: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி ஜனவரி 6-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று காலையில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக திவாகி இருந்தது. நாட்டிலேயே டெல்லியில்தான் அதிகபட்சமாக 238 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 167 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 11% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தமது அமீரகப் பயணத்தை ரத்து செய்துள்ளார். 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜனவரி 6-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக ரீதியிலான உறவின் 50 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி தமது அமீரக் பயணத்தை ரத்து செய்துள்ளார் என்கின்றன டெல்லி தகவல்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்தாலும் ஓமிக்ரான் பரவல் காரணமாக சந்திப்புகளைத் தவிர்த்து வருகிறார். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனுவை ஜனாதிபதி மாளிகை அலுவலகத்திதான் நேற்று தமிழக எம்.பிக்கள் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications