மின்னல் வேகம்.. மோசமான பாதிப்பு.. அமெரிக்காவை அலறவிட்ட புது வகை கொரோனா.! இந்தியாவிலும் நுழைந்தது
டெல்லி: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இது உலகெங்கும் கொரோனா பரவல் குறித்த அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனிடையே அமெரிக்காவைத் திணறடித்த XBB.1.5 வகை கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் பொருளாதார பாதிப்புகள் உலக நாடுகளை வாட்டி வதைத்தது.
கொரோனா வேக்சின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளுக்குப் பிறகு உலக நாடுகள் இப்போது தான் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்தச் சூழலில் சீனாவில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா
மற்ற நாடுகளைப் போல இல்லாமல், சீனாவில் இத்தனை காலம் ஜீரோ கோவிட் பாலிசி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலே ஒட்டுமொத்தமாக அப்பகுதியில் லாக்டவுன் போடப்படும். இதனால் அங்கு கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் இருந்தது. இதற்கு அங்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் போராட்டம் அதிகரித்தது. இதனால் வேறு வழியின்றி கட்டுப்பாடுகளை நீக்கிக் கொண்டது. இருப்பினும், இப்படி திடீரென அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியதால் அங்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது.

கட்டுப்பாடுகள்
அங்குள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது உலகெங்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு கொரோனா பரவினால், அது எளிதாக உருமாற்றமடைய வாய்ப்புள்ளதால் ஆய்வாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாகப் பல உலக நாடுகள் சீனாவில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவில் சீனா உட்பட குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகடிவ் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோசமான வேரியண்ட்
இதனிடையே அமெரிக்காவை அலறவிட்ட ஒமிக்ரான் XBB.1.5 திரிபு இந்தியாவில் நுழைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இந்த புதிய வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு, மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிய இந்த XBB.1.5 வகை ஓமிக்ரான் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிலும் எங்கு இந்த வைரஸ் பாதிப்பு அடுத்த அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் BA.2 வேரியண்டில் இருந்து உருவானதுதான் இந்த XBB வேரியண்ட் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏன் ஆபத்து
மேலும், இது ACE2 ரிசப்டார் போலவே உள்ளதால் இது வேகமாகப் பரவும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இப்போது கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 40% இந்த XBB.1.5 வகை ஓமிக்ரானால் தான் ஏற்பட்டுள்ளது. இப்போது உலகம் எதிர்கொள்ளும் மிக மோசமான வேரியண்ட்டாக இந்த XBB உள்ளதாக மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் தெரிவித்துள்ளார். இந்த வேகமாகப் பரவும் ஆற்றல் தான் இதை ஆபத்தான ஒன்றாக மாற்றுகிறது.

வேக்சின்
கொரோனா வேக்சின் மூலம் கிடைத்த தடுப்பாற்றலில் இருந்து இந்த XBB.1.5 வேரியண்ட் எஸ்கேப் ஆகும். மேலும், நமது செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்பதும் இதை ஆபத்தானதாக மாற்றுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் இந்த XBB வேரியண்ட்களை போலத் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது, ஒரு கட்டத்தில் அவை வேக்சின் தடுப்பாற்றலில் இருந்து தப்பிக்கவும் காரணமாக அமைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆபத்தான XBB.1.5 வேரியண்ட் இந்தியாவில் நுழைந்துள்ளது ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா
இருப்பினும், மத்திய அரசு இப்போதே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. மேலும், நமது நாட்டில் இப்போது 90% பேருக்கு ஏற்கனவே இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 30% பேருக்கு பூஸ்டர் டோஸ் வேக்சினும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறை நமது நாட்டில் கொரோனா பாதிப்பு பெரியளவில் இருக்காது என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா











Click it and Unblock the Notifications