இந்தியாவில் திடீரென ஏறும் கேஸ்கள்.. பிரிட்டனில் பரவும் புதிய வகை ஓமிக்ரான்.. நாம் கவலைப்பட வேண்டுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் XE வகை உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த வகை ஓமிக்ரான் குறித்து சில முக்கிய தகவல்களை ஆய்வாளர்கள் பகிர்ந்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா தொடங்கி ஜப்பான், ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

இப்போது வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட பின்னரே, உலகில் கொரோனா பாதிப்பு மெல்லக் கட்டுப்பாட்டில் வந்து கொண்டு இருந்தது. இருப்பினும், வைரசை இதுவரை நம்மால் முழுமையாக அழிக்க முடிவதில்லை.

 ஓமிக்ரான் கொரோனா

ஓமிக்ரான் கொரோனா

கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதை முழுமையாக அழிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா அலை கட்டுப்பாட்டில் வந்த பிறகு, ஆல்பா, டெல்டா, பீட்டா என கொரோனா வைரஸ்கள் தொடர்ந்து உருமாறிக் கொண்டே சென்றது. அதேபோல கடந்த டிசம்பர் மாதம் ஓமிக்ரான் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

 புதிய வகை

புதிய வகை

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் XE என்று அழைக்கப்படும் இந்த கொரோனா, மற்ற கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவக் கூடியது. இந்த ஓமிக்ரான் இதுவரை பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, BA.1 மற்றும் BA.2 வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டின் பிறழ்வுகளையும் கொண்டதாக இந்த ஓமிக்ரான் XE உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 வேகமாக பரவுமா

வேகமாக பரவுமா

கடந்த காலங்களிலும் இதுபோல இரண்டு பிறழ்வுகளைக் கொண்ட ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய ஓமிக்ரான் XE வகை புதிய கொரோனா என்பதால் இது குறித்து தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதன் தீவிர தன்மை உள்ளிட்டவை துல்லியமாகத் தெரிய வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நமக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின் அடிப்படையில் இது வேகமாகப் பரவும் திறன் கொண்டது என்றாலும் கூட எந்தளவுக்கு வேகமாகப் பரவுகிறது என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.

 உலக நாடுகள்

உலக நாடுகள்

கடந்த ஜனவரி 19ஆம் தேதி இந்த புதிய வகை ஓமிக்ரான் முதலில் இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் பலருக்கு இந்த புதிய வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. அதேபோல ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இந்தப் புதிய வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வகை கொரோனாவுக்கு என்ன மாதிரியான அறிகுறி ஏற்படுகிறதோ அதே அறிகுறிகள் தான் இந்த புதிய ஓமிக்ரான் XE வகையிலும் கண்டறியப்படுகிறது.

 அடுத்த அலை

அடுத்த அலை

இந்தியாவிலும் கூட சிலருக்கு இந்த ஓமிக்ரான் XE வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய உள்ளது. ஓமிக்ரான் XE வகை கொரோனா காரணமாக வரும் காலத்தில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம். இருப்பினும், இந்த புதிய ஓமிக்ரான் XE வகை கொரோனாவால் அடுத்த அலை ஏற்படுமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+