உலகில் கொரோனாவால் பாதிக்கப்படும் இருவரில் ஒருவர் இந்தியர்.. .நிலவரம் மோசமாகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக அளவில் இந்தியாவின் கொரோனா நிலவரம் மோசமாகிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்படும் இருவரில் ஒருவர் இந்தியர் என்ற அளவுக்கு இந்தியாவின் நிலைமை மோசமாகியுள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மே 1ம் தேதி 3 லட்சத்து 92 ஆயிரத்து 603 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 3673 பேர் பலியானார்கள்.

One in two is Indian in Global Corona cases

மகாராஷ்டிராவில் மட்டும் 63,282 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த கேஸ்களில் 16% ஆகும். அடுத்த இடத்தில் 40,990 பேருடன் கர்நாடகமும், 35,636 பேருடன் கேரளாவும் உள்ளன. தமிழ்நாடும் கிட்டத்தட்ட 20,000 கேஸ்கள் என்ற அளவை நெருங்கி விட்டது.

மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 802 பேர் பலியானார்கள். டெல்லியில் 412 பேரும், உபியில் 303 பேரும் பலியானார்கள்.

மறுபக்கம் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் 18 முதல் 44 வயது வரையிலானோருக்கு தடுப்பூசி போடும் திட்டமும் நேற்று தொடங்கியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களுக்கு தடுப்பூசி சப்ளை இல்லை என்பதால் இந்தத் திட்டம் நேற்று தொடங்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+