செம ஸ்பீட்! விரைவில் வரும் ஒரே நாடு ஒரே தேர்தல்? ராம்நாத் கோவிந்த் தலைமையில் பரபர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கான ஆய்வுக்குழுவின் முதல் கூட்டம் இன்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்து முடிந்தது.

இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்கள் தனித்தனியே நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.

One Nation One Election committee meeting to be held today under chairmanship of Ram Nath Kovind

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

மேலும் இந்திய அரசிலமைப்பு சட்டங்கள் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதோடு ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் நடத்தும்போது பாதுகாப்பு பணி, தேர்தல் பணிக்கான ஊழியர்கள் அதிகம் தேவைப்படும். அதோடு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கையும் அதிகமாக தேவைப்படும். இதனால் இந்தியாவுக்கு பெரும் பொருட்செலவு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக 2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு செய்ய மத்திய சட்டத்துறை அமைச்சர் 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளார். குழுவில் மத்திய அமைச்சர் அமித் அஷா, காங்கிரஸ் எம்பியும், லோக்சபா காங்கிரஸ் குழு தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்த்து இந்தக் குழுவில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே தான் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆய்வுக்குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ராம்நாத் கோவிந்த் தலைமை வகித்தார்.

இன்றைய கூட்டத்தில் முதலில் அனைவரும் அறிமுகம் ஆகினர். அதன்பிறகு அவர்கள் ஆலோசனைகளை தொடங்கினர். இந்த ஆலோசனை கூட்டம் 2 மணிநேரம் வரை நடந்து முடிந்தது. இருப்பினும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த குழு என்பது நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா? அப்படி செய்தால் பாதுகாப்பு பணி, தேர்தல் பணி உள்ளிட்டவற்றில் எந்த மாதிரியான நடைமுறையை கொண்டு வர வேண்டும். செலவு குறையுமா? அதிகரிக்குமா? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இந்த குழுவின் ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான் இந்தியாவில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' கொண்டு வரப்படுமா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படும். இதனால் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடக்கும் இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+