’ஒரே நாடு ஒரே தேர்தல்’ வேகம் எடுக்கிறதா பணிகள்? ராம்நாத் கோவிந்த் தலைமையில் 23 ஆம் தேதி கூட்டம்
டெல்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் வரும் 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே அவ்வப்போது பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடியே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக அவ்வப்போது பேசுவதை காண முடிகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இதுகுறித்த பேச்சு எழுந்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. இந்த நிலையில், தான் 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் இந்த சூழலில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
5 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பின. குறிப்பாக மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு எழுந்தது. அதேபோல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்பட இருப்பதாகவும் அது குறித்து மசோதா கொண்டு வரப்படலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த யூகங்களுக்கு தீனி போடும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங்,
மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். எனினும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குழுவில் இடம் பெற மறுப்பு தெரிவித்து விட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டில் உள்ள கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இந்தக் குழு பரிந்துரை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம் செப்.23 ஆம் தேதி நடைபெறும் என்று குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications