கொரோனா 4வது அலை.. 3ல் ஒருவர் வந்துவிட்டதாக கருத்து! நிபுணர்கள் சொல்வது என்ன? வதந்திகளை நம்ப வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கொரோனா நான்காவது அலை ஏற்கனவே ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கிவிட்டதாக கிட்டத்தட்ட 34 சதவீதம் பேர் அதாவது மூன்றில் ஒரு இந்தியர்கள் கருதுவதாக புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கொரோனா 3வது அலையின் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை திடீரென உச்சமடைந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களிலேயே உச்சமடைந்து பின்னர் மீண்டும் சரிவை நோக்கிச் சென்றது.

தடுப்பூசி மற்றும் மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கு வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கூறினர்.

கொரோனா 4வது அலை

கொரோனா 4வது அலை

இந்நிலையில் கொரோனா நான்காவது அலை ஏற்கனவே ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கிவிட்டதாக கிட்டத்தட்ட 34 சதவீதம் பேர் அதாவது மூன்றில் ஒரு இந்தியர்கள் கருதுவதாக புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 13% பேர் இது மே மற்றும் ஜூன் மாதங்களில் தொடங்கும் என்று நம்புகிறார்கள், 7% ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மற்றும் 4% செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில். ஒப்பிடுகையில் 29% பேர் 2022 இல் இது சாத்தியமில்லை என்றும் 4% பேர் அடுத்த ஆறு மாதங்களுக்கு இது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளனர்.

புதிய கருத்துகணிப்பு

புதிய கருத்துகணிப்பு

சமூக ஊடக தளமான LocalCircles நடத்திய கணக்கெடுப்பில் நாட்டில் உள்ள 341 மாவட்டங்களில் இருந்து 36,000 பேர் பதில் அளித்தனர். அதில் 3ல் ஒருவர், 4வது அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறியிருந்தாலும், 3ல் 2 பேர் இன்னும் வரவில்லை என்று கூறியதாக லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனர் சச்சின் தபாரியா கூறினார். இருப்பினும், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒரு சிறிய எழுச்சி B.1.1.7 அல்லது பீட்டா மாறுபாட்டால் ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியது.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

இம்முறை BA.2.12.1 BA.4 மற்றும் BA.5 துணை வகைகளுடன் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது, அவை தற்போது தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் இந்தியாவில் 4வது அலையை உண்டாக்கும் திறன் உள்ள நிலையில், இந்தியாவின் தினசரி கோவிட் வழக்குகள் 17% அதிகரித்துள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் 2,927 புதிய தொற்றுகள் உள்ளன. இந்தியாவின் ஆர் வேல்யூ 2.1 ஆக உள்ளது.

நம்பிக்கை உள்ளது

நம்பிக்கை உள்ளது

பல மாவட்டங்களில் 83% பேர் தினசரி கொரோனா வழக்குகள் குறித்து தினமும் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 55% பேர், நான்காவது கோவிட் அலை ஏற்பட்டால், இந்தியாவில் உள்ள வல்லுநர்கள் அதனை திறம்பட கையாள முடியும் என்பதில் தங்களுக்கு "மிகவும் நம்பிக்கை" இருப்பதாகக் கூறியுள்ளனர். 29% பேர் "ஓரளவு நம்பிக்கையுடன்" இருப்பதாகவும், 4% பேர் "மிகக் குறைவான நம்பிக்கையுடன்" இருப்பதாகவும், 8% பேர் "நம்பிக்கையே இல்லை" என்றும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+