உண்மையை கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது.. சிபிஐ அதிரடி வாதம்.. ப. சிதம்பரத்திற்கு செக்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் இருந்து உண்மையை வெளியே கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது என்று சிபிஐ தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ED argument against Kapil Sipal argument in Supreme Court

    டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் இருந்து உண்மையை வெளியே கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது என்று சிபிஐ தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

    கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் முன் ஜாமீன் கேட்டும், சிபிஐ வழக்கில் ஜாமீன் கேட்டும் ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதம் ஏற்கனவே முடிந்துவிட்டது. ப. சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக தற்போது சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் செய்தார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    துஷார் மேத்தா தனது வாதத்தில் ப. சிதம்பரத்திற்கு சலுகைகள் வழங்க கூடாது. ப. சிதம்பரத்திற்கு சலுகைகள் கொடுத்தால் அது தவறான முன்னுதாரணமாக மாறும். விஜய் மல்லையா போன்றவர்களுக்கு ப. சிதம்பரம் வழக்கு உதாரணமாக மாற கூடாது.

    உண்மை

    உண்மை

    ஜாகிர் நாயக், நீரவ் மோடி ப. சிதம்பரம் வழக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கூடாது. ப. சிதம்பரத்திடம் இருந்து உண்மையை வர வைக்க ஒரே வழிதான் இருக்கிறது. அவரை கைது செய்தால் மட்டுமே எங்களால் அவரிடம் உண்மையை வரவைக்க முடியும்.

    ஜாமீன் கூடாது

    ஜாமீன் கூடாது

    அவருக்கு ஜாமீன் கொடுத்தால் எங்களால் எதுவுமே செய்ய முடியாது. ப. சிதம்பரத்திடம் நாங்கள் பேட்டி எடுக்க விரும்பவில்லை: விசாரணை செய்ய விரும்புகிறோம். ஆனால் ப. சிதம்பரம் எங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதே இல்லை. ஆதாரங்களை அழிப்பதற்கு ப. சிதம்பரம் முயல்வார்.

    எப்படி விசாரணையை

    எப்படி விசாரணையை

    சாட்சியங்களை மிரட்டுவதற்கு ப. சிதம்பரம் முயல்வர். ப. சிதம்பரம் வெளியே இருந்தால் விசாரணைக்கு பெரிய பிரச்சனை ஏற்படும். ப. சிதம்பரத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு பாதுகாப்பு கூட விசாரணையை கெடுக்கும். ப. சிதம்பரத்தை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். வழக்கிற்கு அவசியம் என்பதால் காவலை தொடர வேண்டும்.

    கத்தி குத்து

    கத்தி குத்து

    கத்தியால் ஒருவரை குத்துவது எப்படி குற்றமோ அப்படிதான் இதுவும். அது தனி மனித தாக்குதல்: இது தேசத்தின் மீதான தாக்குதல். ப. சிதம்பரம் சார்பாக இதில் வாங்கப்பட்ட லஞ்சம் எல்லாம் வெள்ளைப்பணமாக மாற்றப்பட்டுள்ளது. கருப்பு பண முறைகேடு பெரிதாக நடந்துள்ளது, என்று சிபிஐ தரப்பு வாதம் வைத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+