அடாவடி பாகிஸ்தான்! அப்பாவி மக்கள் மீது குறி.. 16 இந்தியர்கள் பலி! இதுதான் அறமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கிறோம் என்கிற பெயரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியுள்ளார்.

இந்திய மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வியோமிகா சிங், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக தெரிவித்திருக்கிறார்.

pakistan india Pakistan

"ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ராஜூரி, குப்ராவா போன்ற பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதலை அதிகரித்திருக்கிறது. துப்பாக்கிச்சூடு, ஷெல் தாக்குதலை அதிகரித்திருக்கிறது. மூன்று பெண்கள் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் தாக்குதலை நிறுத்தும் நோக்கத்துடன்தான் நாங்கள் பதிலடி கொடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து நடத்தி ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதிகளை குறி வைத்துதான். இதில் பொது மக்களுக்கோ, பாகிஸ்தான் ராணுவத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கிறோம் என்கிற பெயரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். பாகிஸ்தான் வான் வழியாக இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது. தாக்குதலை இந்தியா முறியடித்தவிட்டது. இருப்பினும், சில இடங்களில் பொதுமக்களை அந்நாட்டு ராணுவம் குறி வைத்திருக்கிறது.

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை நிலைமையை மோசமாக்கும் முயற்சி அல்ல என்று விவரித்திருக்கும் மிஸ்ரா, உலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருக்கிறது. கடந்த காலங்களில் பல முறை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டிருக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. இதற்கு எதிராகத்தான் நாங்கள் களமாடியுள்ளோம்.

உதாரணத்திற்கு ஒசமா பின்லேடன் எங்கு கண்டுபிடிக்கப்பட்டார்? அவரை தியாகி என்று அழைத்தவர்கள் யார் என்பதை இந்த உலகம் அறியும். ஒசாமாவை போல ஐநா தடை செய்த பல பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. சமீபத்தில் கூட அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இந்தியாவின் பதிலடிக்கு எதிராக, நேற்று ஜம்மு காஷ்மீரில் சீக்கியர்களை குறி வைத்து அந்நாட்டு ராணுவம் தாக்குதலை நடத்தியிருக்கிறது. பூஞ்ச் பகுதியில் சீக்கிய வழிப்பாட்டு தலத்தை தாக்கியுள்ளது" என்றும் விளக்கமளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+