"ஆபரேஷன் பிரம்மா".. முதல் கை இந்தியாவோடது! மீண்டும் நிவாரண பொருட்களுடன் மியான்மர் கிளம்பிய கப்பல்கள்
டெல்லி: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 'ஆபரேஷன் பிரம்மா' நடவடிக்கையின் கீழ் 30 டன் நிவாரணப் பொருட்களை கடற்படை கப்பல்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது இந்தியா. முன்னதாக 'ஆபரேஷன் பிரம்மா' மூலமாக விமானத்தில் 15 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மார்ச் 28 ஆம் தேதி காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் மியான்மர் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.

மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், அதன் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. வியட்நாம், மலேசியா, சீனாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மியான்மர் நாட்டில் உள்ள பல வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000-ஐ நெருங்கி உள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்கள் ஆவதால் கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தோர் மியான்மர் மருத்துவமனையில் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள மியான்மருக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன. இந்தியா ' ஆப்பரேஷன் பிரம்மா' என்ற பெயரில் உடனடியாக உதவி நடவடிக்கையை தொடங்கியது. வெளியுறவு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, என்டிஆர்எஃப் ஆகியவற்றுடன் இணைந்து முயற்சிகள் நடைபெறுகின்றன.

நேற்று முன் தினம் தற்காலிக கூடார துணிகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், பிரட் உள்ளிட்ட உணவு பொருட்கள், சோலார் விளக்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஜெனரேட்டர் செட்டுகள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்கள் இந்திய விமானப்படையின் 'C130J' விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நிலநடுக்கத்தால் அங்குள்ள விமான நிலையத்தில் விமான சேவைகளே தொடங்காத நிலையில் ஆபரேஷன் பிரம்மா மூலம் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்தது இந்தியா.
இந்நிலையில், ஐஎன்எஸ் கார்முக் மற்றும் எல்சியு 52 ஆகிய கப்பல்கள் மூலம் நிவாரண பொருட்கள் மியான்மருக்கு விரைந்து உள்ளன. இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "ஆபரேஷன் பிரம்மா தொடர்கிறது. 30 டன் நிவாரண மற்றும் மருந்து பொருட்களுடன் ஐஎன்எஸ் கார்முக் மற்றும் எல்சியு 52 ஆகிய கப்பல்கள் மியான்மரின் யாங்கூன் நோக்கி விரைந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
மியான்மருக்கு உலக நாடுகளிலேயே முதல் நாடாக உதவிக்கரம் நீட்டியது இந்தியா தான். இந்தியாவில் இருந்து சென்றுள்ள பேரிடர் மீட்புக் குழு மண்டலே நகருக்குச் சென்றது. மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மண்டலேவை அடைந்த முதல் மீட்புக் குழு இந்தியாவின் NDRF மீட்புக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications