பாகிஸ்தானுக்கு அமெரிக்கா - சீனா வழங்கிய 10 போர் விமானங்கள் காலி.. இந்திய விமானப்படை தளபதி அறிவிப்பு
டெல்லி: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 8-10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். இதில் 4- 5 விமானங்கள் அமெரிக்காவின் எஃப் 16 மற்றும் சீனாவின் ஜேஎஃப் 17 ரக போர் விமானங்களாக இருக்கலாம் என்று நம் நாட்டின் விமானப்படையின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரித் சிங் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் 93வது விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானப்படையின் தலைமை ஏர் மார்ஷல் அமர் பிரித் சிங் இன்று விமானப்படையின் சாதனைகள் பற்றி விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக இன்று அவர் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானை பந்தாடியது பற்றிய விஷயங்களை விவரித்தார். இதுபற்றி அமர் பிரித் சிங் கூறியதாவது:
பாகிஸ்தானை எடுத்து கொண்டால் அந்த நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளது. நாங்கள் பாகிஸ்தானின் விமான நிலையங்களை தாக்கினோம்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலமாக பாகிஸ்தானின் 8-10 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. இதில் எஃப் 16 மற்றும் ஜேஎஃப் 17 ரக போர் விமானங்களும் அடங்கும். குறிப்பாக வானில் பறந்தபோது 4 முதல் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது. இதில் ஒரு கண்காணிப்பு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
போர் விமானங்களை தவிர தரையில் செயல்படும் டார்க்கெட்டுகள் துல்லிய தாக்குதல்கள் மூலமாக அழிக்கப்பட்டது. அதன்படி நான்கு இடங்களில் உள்ள ரேடார்கள், இரண்டு இடங்களில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், இரண்டு ஓடுபாதைகள், மூன்று ஹேங்கர்கள், தரையில் இருந்து ஏவுகணையை அனுப்பும் இடம் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டது. அதேபோல் பராமரிப்புக்காக தரையில் நிறுத்தி வைக்கப்பட்ட 4 முதல் 5 போர் விமானங்களும் அழிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் வான்வெளியில் நுழைந்து நீண்டதூர தாக்குதலை நடத்தியதற்கான தெளிவான சான்றுகள் நம்மிடம் உள்ளன. சமார் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று பாகிஸ்தானை தாக்கி உள்ளோம். பாகிஸ்தான் நம் நாட்டின் விமானங்களை அழித்ததாக கூறுவது என்பது கவர்ச்சிகரமான புனையப்பட்ட கதையாகும்.
இந்தியாவின் 15 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம் என்று அவர்கள் நினைத்தால் நினைத்து கெள்ளட்டும். மேலும் அடுத்த முறை சண்டைக்கு வந்தால் 15 விமானங்கள் குறைவாக இருப்பதாக அவர்கள் நினைப்பார்கள்? அது அவர்களுக்கு பின்னடைவாகலாம். இதனால் அதை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?.
இன்னும் சொல்லப்போனால் நம் விமானப்படை தளத்தை அழித்தது, விமானங்களை வீழ்த்தியது தொடர்பாக ஏதேனும் ஒரு படத்தை பார்த்து உள்ளீர்களா? ஆனால் பாகிஸ்தானின் இழப்புகளை உறுதி செய்யும் வகையிலான போட்டோக்களை பலவற்றை நாங்கள் காட்டினோம்.
பாகிஸ்தான் தங்களின் பெயரை காப்பாற்ற அந்த நாட்டு மக்களிடம் ஏதாவது காட்ட வேண்டும் அல்லவா? இதனால் பொய் சொல்லி மகிழ்ச்சியாக இருக்கட்டும்'' என்றார். இதில் எஃப் 16 என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களாகும். ஜேஎஃப் 17 என்பது சீனாவின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications