பெருமையின் சின்னமாக மாறிய Operation sindoor! 2025ன் கடைசி மன் கீ பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: இந்த ஆண்டு, 'ஆபரேஷன் சிந்தூர்' ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையின் சின்னமாக மாறியது எனவும், இன்றைய இந்தியா தனது பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் பார்த்தது என 2025ஆம் ஆண்டின் கடைசி மனதின் குரல் ( மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் கடைசி மன் கீ பாத் நிகழ்ச்சியில் மூலம் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்," 2026ம் ஆண்டு வாசலில் வந்து நிற்கிறது. இன்று நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு முழு ஆண்டின் நினைவுகள் என் மனதில் சுழன்று கொண்டிருக்கின்றன. எண்ணற்ற காட்சிகள், பல விவாதங்கள், தேசத்தை ஒன்றிணைத்த பல சாதனைகள் பற்றி தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மன் கீ பாத் உரை
தேச பாதுகாப்பு தொடங்கி விளையாட்டு துறை வரை அறிவியல் ஆய்வகங்கள் தொடங்கி பங்குச்சந்தை வரை அனைத்திலும் நாம் இந்த ஆண்டு தடம் பதித்து இருக்கிறோம். இந்த ஆண்டு, 'ஆபரேஷன் சிந்துர்' ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையின் சின்னமாக மாறியது. இன்றைய இந்தியா தனது பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் பார்த்தது. ஆபரேஷன் சிந்துரின் போது நமது தாய் நாட்டின் மீதான அன்பையும் பற்றுகளையும் நாட்டு மக்கள் வெளிப்படுத்தியது கண்கூடாக தெரிந்தது.
பிரதமர் மோடி உரை
இந்த ஆண்டு இந்தியாவின் விளையாட்டு துறைக்கும் மறக்க முடியாத ஆண்டு. சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. உலக கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டியது. பாரா தடகள போட்டிகளில் கவனம் கொள்ளத்தக்க வெற்றிகளை குவித்தது என ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இந்தியா சாதனை
இந்த ஆண்டு விண்வெளி துறையிலும் நாம் மகத்தான சாதனை செய்திருக்கிறோம். இந்தியரான சுபான்ஷூ சுக்லா விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெற்றிகரமாக சென்று வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவும் விண்வெளி துறையில் ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறது. உலகத்தின் பார்வை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி துறையின் பக்கம் திரும்பி இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு தொடர்பான பல முயற்சிகள் 2025 ஆம் ஆண்டின் தனிச்சிறப்பாகவும் அமைந்தன.
இந்தியாவின் வளர்ச்சி
இந்தியாவில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருக்கிறது. 2025-ல், நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம் அனைத்தும் ஒன்றிணைந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகமே சங்கமித்த பிரயாக்ராஜ் கும்பமேளா வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அது மட்டுமில்லாமல் ராமர் கோவிலின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து முடிந்தது, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமிதம் கொள்ளக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது. இன்று உலகம் இந்தியா மீது மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. இந்தியாவின் மீதான இந்த நம்பிக்கைக்கு மிகப்பெரிய காரணம் நமது இளைஞர் சக்திதான்.
தேசிய இளைஞர் தினம்
அறிவியல் துறையில் நமது சாதனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் உலக நாடுகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன. ஜனவரி 12ம் தேதியன்று, சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு 'தேசிய இளைஞர் தினம்' கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் 'இளம் தலைவர்கள் கலந்துரையாடல்' நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது, அதில் நானும் நிச்சயமாகப் பங்கேற்பேன்.
இந்தப் திட்டத்தில் நமது இளைஞர்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதைக் காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications