ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் போர் தாக்குதல்.. பாகிஸ்தானின் ராணுவ முதுகெலும்பை முறித்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான தனது பதிலடி மூலம் இனி இந்தியாவில் தீவிரவாதம் சகித்துக்கொள்ளப்படாது என்ற வலுவான மெசேஜை மத்திய அரசு உலகிற்கு தெளிவாக அனுப்பி உள்ளது. தீவிரவாதிகள் உள்ள கடைசி கட்ட தலைகளை மட்டும் குறி வைக்காமல்.. நேரடியாக தீவிரவாதிகளின் தலைமை இடங்களை, அவர்களின் தலைகளை குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தியாவின் தாக்குதல் உத்தியில் செய்யப்பட்ட துணிச்சலான மாற்றத்தைக் இது குறிக்கிறது. தீவிரவாதத்தை அதன் ஆணி வேரோடு அழிக்கும் எண்ணத்தோடு இந்தியா இந்த தாக்குதல்களை மேற்கொண்டது.

pakistan Jammu Kashmir

இந்தியாவின் ஆயுதப் படைகள் மூலம் கவனமாகத் திட்டமிடப்பட்டு, எந்த குறையும் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிட்டது. இது பாகிஸ்தானின் வழக்கமான போர் தளவாடங்களை அழித்தது. இந்த நடவடிக்கை பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாக ஓரங்கட்டி, ராணுவ ரீதியாக முடக்கி, சில மணி நேரங்களுக்குள் அவர்களை அவசரமாக போர் நிறுத்தத்தை நாட வைத்தது.

தரமான தாக்குதல் உத்தி - வெறும் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல

இந்த நடவடிக்கைக்கான அடித்தளம் ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு விதைக்கப்பட்டது.. அதைத் தொடர்ந்து மே 9 அன்று 26 இந்திய நிலைகளை குறிவைத்து ஒருங்கிணைந்த பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய இதற்கு பதிலடி தரும் வகையில் திடீர் என்று தாக்கவில்லை. இந்தியாவின் தாக்குதல்கள் முறையாக கணக்கிடப்பட்டது. பல பரிமாணங்கள் கொண்டது மற்றும் சரியான நேரத்தில் செய்யப்பட்டது. மே 10 அதிகாலையில், 11 முக்கியமான பாகிஸ்தான் விமானத் தளங்களில் 90 நிமிட துல்லியமான விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி பிரதேசத்திற்குள் ஆழமாகத் சென்று தாக்கி பாகிஸ்தானை நிலை குலைய வைத்தது.

இந்த தாக்குதல் வெறும் குறியீட்டு தாக்குதலாக இருக்கவில்லை. இது பாகிஸ்தானின் வான்வழிப் போர் திறனை மொத்தமாக காலி செய்யும் தாக்குதல். அவர்களால் போரை நடத்தவே முடியாமல் முடக்கும் தாக்குதல்.

பாகிஸ்தானின் விமானப்படையின் முதுகெலும்பை உடைத்த இந்தியா

இந்தியா நடத்திய இந்த ஆபரேஷனில் பாகிஸ்தான் விமானப்படையின் மிக முக்கியமான இடங்கள் தாக்கப்பட்டன.

நூர் கான் விமானப்படை தளம் (ராவல்பிண்டி) - பாகிஸ்தானின் பொது தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ விஐபி போக்குவரத்தின் மையமாகும். உயர் மட்ட இராணுவ மற்றும் அரசாங்க போக்குவரத்தை கையாளும் மையம். அவசர காலத்தில் பிரதமரே இங்கிருந்துதான் தப்பிக்க வேண்டும். இது தாக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் அரசியல் மற்றும் இராணுவ நரம்பு மையமான இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பிற்கு அருகில் உள்ளது.

சர்கோதா (முஷாப் தளம்) - பாகிஸ்தானின் அணுசக்தி விநியோக தளங்களின் நரம்பு மையம்.அணு சக்தி அட்டாக் நடத்தும் விநியோக தளம். பாகிஸ்தான் முழுவதும் விமான தளவாடங்கள் மற்றும் துருப்புக்களின் இயக்க நடவடிக்கைகளை கண்காணிக்கும், கட்டளைகளை இடும் ஏர் மொபிலிட்டி கமாண்ட் இங்கே உள்ளது.

ரஃபிகி, முரிட், சியால்கோட், ஸ்கர்டு, ஜகோபாபாத், சுக்கூர், பஸ்ரூர், சுனியன் மற்றும் போலாரி - கூட்டாக பாகிஸ்தானின் F-16கள், JF-17 தண்டர்ஸ், மிராஜ்கள் மற்றும் மின்னணு போர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவற்றின் அழிவு பாகிஸ்தானின் வானத்தை கிட்டத்தட்ட பாதுகாப்பற்றதாக மாற்றியது.

இந்தத் தாக்குதல்கள் விமானப்படை உயர்நிலைப் படைகள், ட்ரோன் தளங்கள், ரேடார் நெட்வொர்க்குகள் மற்றும் போருக்கு தயாராக இருக்கும் விமானங்களை செயலிழக்கச் செய்தன, ஒரே இரவில் பாகிஸ்தானின் விமானப்படையை இந்த தாக்குதல் காலி செய்தது.

ஆபரேஷன் சிந்தூர்: தீர்க்கமான தாக்குதல்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல் - ஆபரேஷன் சிந்தூர் - சரியாக அதிகாலை 1:04 மணிக்கு நடத்தப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது உயர் மதிப்புள்ள இடங்களை குறிவைத்தது நடத்தப்பட்டது. இதில் பஹாவல்பூர் மற்றும் முரிட்கேயில் உள்ள பயங்கரவாத தளவாடகங்கள் அடங்கும். அவை ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) ஆகியவற்றின் தலைமையகங்களாக அறியப்படுகின்றன, இவை கடந்த மூன்று தசாப்தங்களாக இந்திய மண்ணில் நடந்த சில கொடிய தாக்குதல்களுக்குப் பொறுப்பான தீவிரவாத குழுக்களாகும்.

இந்த இலக்குகள் ஒன்றும் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒன்பது தளங்களில் ஒவ்வொன்றும் பயங்கரவாத அமைப்புகளின் முக்கியமான முனையங்களாக அடையாளம் காணப்பட்டன. அவை தீவிரவாத ஊடுருவல், தீவிரவாத பயிற்சிகளை அளிக்கும், திட்டமிடும் மையங்கள் ஆகும்.

சியால்கோட் மற்றும் கோட்லி - எல்லை தாண்டிய ஊடுருவல் தளவாடங்களுக்கு முக்கியமானது.

பிம்பர் - ISI- ஒருங்கிணைந்த தீவிரவாத நடவடிக்கைகளுக்கான மையம்.

பஹாவல்பூர் மற்றும் முரிட்கே - JeM மற்றும் LeT இன் சித்தாந்த மற்றும் செயல்பாட்டு தலைமையகம்.

25 நிமிட துல்லியத் தாக்குதல் மூலம் இந்த இடங்கள் அழிக்கப்பட்டன. இது பாகிஸ்தானுக்கும் உலக நாடுகளுக்கும் முக்கிய ஒரு செய்தியை அனுப்பியது. இந்தியா பதிலடி கொடுக்கவில்லை - அது பாகிஸ்தானின் பயங்கரவாத அடித்தளத்தை அடித்து நொறுக்கியது.

ஆகாஷ்தீர்: இந்தியாவின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு கேம்-சேஞ்சர்

இந்தியாவின் இராணுவ ஆயுதக் களஞ்சியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த பரிமாணத்தைச் தந்தது ஆகாஷ்தீர். இது இந்திய ராணுவத்திற்கு சொந்தமான தன்னாட்சி ஏவுகணை தடுப்பு அமைப்பு ஆகும். நிகழ்நேர இலக்கு மற்றும் இடைமறிப்பு அமைப்பு ஆகும். இந்தியாவின் டிஆர்டிஓ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) உருவாக்கிய இந்த அமைப்பு, இஸ்ரோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஏவுகணை தடுப்பு அமைப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆபரேஷன் சிந்தூருடன் இணைந்து ஆகாஷ்தீரின் பயன்பாடு இந்திய பாதுகாப்பு துறையின் பலத்தை உலகத்திற்கு பறைசாற்றியது. ஆகாஷ்தீர் மூலம் முதல் முறையாக, ஒரு மேற்கத்திய நாடு அல்லாத நாடு, போர் நடவடிக்கைகளின் எதிர்காலத்தை மறுவரையறை செய்த உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது முழுமையாக உள்நாட்டு உற்பத்தி, AI-ஒருங்கிணைந்த, செயற்கைக்கோள் உடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பு ஆகும்.

பாகிஸ்தானின் வான் படை பலத்தை இந்தியா தகர்த்தது. இது மட்டுமன்றி, AI மூலம் இயக்கப்படும் போர் அமைப்புகள் எப்படி வேலை செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இந்த ஆகாஷ்தீர் அமைந்தது. இது இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு நிரூபணமாக அமைந்தது. இதன் மூலம் இந்திய எதிரிகளுக்கு ஒரு தெளிவான செய்தியும் அனுப்பப்பட்டது. இந்தியாவின் இராணுவத் திறன்கள் வலிமையானவை மட்டுமல்ல, அது எதிர்காலத்திற்கும் ஏற்றவை என்று நிரூபிக்கப்பட்டது.

உளவியல் தாக்குதல்

இந்திய இராணுவம் தந்த பதிலடி வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியது அதன் இரட்டை அடுக்கு அட்டாக் ஆகும். பாகிஸ்தானின் ராணுவ திறன்களை அழித்து அதன் தலைமையை உளவியல் ரீதியாக நிராயுதபாணியாக்கியது.

நூர் கான் விமானப்படைத் தளத்தைத் தாக்கியதன் மூலம், இந்தியா இஸ்லாமாபாத்தின் மையப்பகுதியை நெருங்கி, பாகிஸ்தானின் எந்த இடத்தையும் தாக்க முடியும் என்பதை நிரூபித்து பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பிக்கையை உடைத்தது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள், ரேடார் அமைப்புகள், போர் விமானங்களை அடித்து வீழ்த்தியதன் மூலம் , இந்தியா பாகிஸ்தானை அதன் சொந்த நாட்டிலேயே, சொந்த வானிலே வீழ்த்தியது.

இது சாதாரண வான்வழித் தாக்குதல் அல்ல - இது இந்திய விமானப்படை, உளவுத்துறை அமைப்புகள் மற்றும் மூலோபாய திட்டமிடுபவர்களுக்கு இடையேயான தரமான ஒருங்கிணைப்பின் வெளிப்பாடாகும். முறையாக திட்டமிடப்பட்டு.. இந்த தாக்குதல்கள் முறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

அணுசக்தி தடுப்பு கோட்பாடு நிராகரிக்கப்பட்டது

இந்திய பதிலடியைத் தடுக்க அடிக்கடி காட்டப்படும் பாகிஸ்தானின் நீண்டகால அணுசக்தி தடுப்பு கோட்பாடு இதன் மூலம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. பாகிஸ்தானின் உட்பகுதியை தாக்கினால் அணு ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதே அதன் அணு ஆயுத கொள்கை. ஆனால் இந்தியா முறையாக திட்டமிட்டு பாகிஸ்தானின் இந்த அணு ஆயுத ரெட் லைனை தாண்டியும் கடுமையாக தாக்குதல் நடத்தியது.

அதிகரித்து வரும் இழப்புகளையும், தனது இராணுவத் தலைமையகத்திற்குள் முழுமையான தகவல் தொடர்பு முறிவையும் எதிர்கொண்ட பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ, இந்தியாவைத் தொடர்பு கொண்டு போர் நிறுத்தத்தை ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் கோரினார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் சீனாவை மத்தியஸ்தம் செய்ய அழைக்க முயன்றார். ஆனால் இந்தியா அதை ஏற்கவில்லை. இந்தியா பின்னோக்கி செல்வதை விரும்பாமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

இந்தியாவின் தாக்குதலில் இருந்த தெளிவு:

சிந்தூர் நடவடிக்கையின் சாராம்சம் வெறும் இராணுவம் மட்டுமல்ல - அது கோட்பாட்டு ரீதியானது. பழைய விதிகள் இனி பொருந்தாது. இந்தியா தந்து தாக்குதல்கள் மூலம் புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது,
தீவிரவாத தாக்குதலுக்கு இனி முழுமுதற் பதிலடி தரப்படும், அடையாள பதிலடி மட்டும் தரப்படாது என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.

போர் நிறுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டே உள்ளது என்பதை இந்தியா தெளிவுபடுத்தி உள்ளது. ஏப்ரல் 22 பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்ட முடிவுகளில் எந்த பின்வாங்கலும் இருக்காது என்றும் அறிவித்துவிட்டது.

முடிவுரை

இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதல்களின் விளைவு? என்று பார்த்தால்.. இதன் மூலம் பாகிஸ்தான் அவமானப்படுத்தப்பட்டது. அதன் வலிமையற்ற ராணுவ பலம் அம்பலப்படுத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தான் முழுக்க முழுக்க ஜிஹாதி குழுக்களை நம்பியிருப்பது அம்பலப்படுத்தப்பட்டது. முழுமையான அழிவு ஏற்படும் என்ற அச்சத்தால், விரக்தியால் வேறு வழியின்றி போர்நிறுத்தத்தைக் கோரும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

அமெரிக்காவிற்கும் பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தான் தொலைபேசி அழைப்பு விடுத்து கெஞ்சியதன் மூலம் தெற்காசியாவில் அரசியல் சூழ்நிலையை தீர்மானிப்பது, கட்டுப்படுத்துவது இந்தியாதான் என்பது உலகிற்கு தெரிந்துவிட்டது.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடைமுறையில் உள்ளது. "பாகிஸ்தான் சுட்டால், நாங்கள் சுடுவோம்" என்று இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் அனைத்து நாடுகளுக்கும் தெரிவித்துவிட்டது. இது புதிய இந்தியாவின் புதிய நிலைப்பாடு. இந்தியா வெறுமனே பதிலளித்ததில்லை.. பாகிஸ்தானின் ராணுவத்தையே கதி கலங்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+