பாகிஸ்தான் மீது இனி தாக்குதல் உண்டா? அஜித் தோவல் வார்னிங்.. நாட்டை காப்பாற்றுவாரா ஷெபாஸ் ஷெரீப்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று நம் நாடு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. மொத்தம் 9 பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 70 பேர் வரை பலியாகினர். இதற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கொக்கரித்து வரும் நிலையில் மீண்டும் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுமா? என்பது பற்றி நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இன்று நம் நாடு பதிலடி கொடுத்தது. இன்று அதிகாலை 1 மணிக்கு பிறகு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

operation-sindoor-if-pakistan-attacks-we-prepared-to-retaliate-resolutely-says-national-security-a

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 5 பயங்கரவாத முகாம்கள், பாகிஸ்தானில் செயல்பட்ட 4 பயங்கரவாத முகாம்கள் என்று மொத்தம் 9 இடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் மீது இனி தாக்குதல் நடத்தப்படுமா? என்பது பற்றி நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அடுத்த பேட்டியில், ‛‛பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் நமக்கு இல்லை. ஆனால் பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்து சீண்டினால் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்'' என்று கூறினார்.

அதாவது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இனி பாகிஸ்தான் அமைதியாக இருக்க வேண்டும். அதையும் மீறி நம் நாட்டுடன் மோதினால் இன்னும் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு வார்னிங் செய்துள்ளார். ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் இன்னும் திருந்தவில்லை. இன்றைய தாக்குதலை தொடர்ந்து நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த முப்படைகளுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு பிறப்பித்துள்ளார். நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து முடிவுகளையும் எடுக்க முப்படைகளுக்கும் சுதந்திரம் வழங்கி உள்ளார்.

இப்படியான சூழலில் தான் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் தாக்கினால் திரும்பி அடிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தானை காப்பாற்றும் பொறுப்பு என்பது அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கையில் தான் உள்ளது. தாக்குதல் தேவையில்லை என்று பம்மினால் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் மீண்டும் இந்தியாவிடம் வசமான பதிலடியை பெற வேண்டி இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+