பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை கொடுத்த பாகிஸ்தான்.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்கள் பயங்கரவாதிகள். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்கிறது. இது பாகிஸ்தானில் ஒரு நடைமுறையாக இருக்கலாம்.பாகிஸ்தானில் நேற்று பயங்கரவாதிகளின் இறுதி சடங்கில் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆதாரத்தை வெளியிட்டார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா நேற்று பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத மையங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் மூலம் நம் நாடு அட்டாக் செய்தது. இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.

இதையடுத்து நம் நாட்டை குறிவைத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 15 நகரங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ட்ரோன் தாக்குதலை நம் நாடு மேற்கொண்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான் நடுங்கிப்போய் உள்ளது.
இந்த பதற்றத்துக்கு நடுவே தான் நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛ ஆபரேஷன் சிந்தூர் மூலம் கொல்லப்பட்ட நபர்கள் பயங்கரவாதிகள். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்கிறது. இது பாகிஸ்தானில் ஒரு நடைமுறையாக இருக்கலாம்.பாகிஸ்தானில் நேற்று பயங்கரவாதிகளின் இறுதி சடங்கில் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்'' என்று கூறினார்.
அதுமட்டுமின்றி நம் நாட்டின் தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று இருப்பது, இறந்தவர்களின் சவப்பெட்டியில் பாகிஸ்தான் கொடி போர்த்தி இருக்கும் போட்டோக்களை அவர் காண்பித்தார்.












Click it and Unblock the Notifications