Operation Sindoor: அதிரடி காட்டும் இந்தியா.. இருநாட்டு எல்லையில் இருந்து வெளியேறும் மக்கள்..உச்சகட்ட பதற்றம்
டெல்லி: பஹல்காம் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பதிலடியை தொடங்கியுள்ளது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற நடவடிக்கையின்கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் தாக்குதலையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்கள் வெளியேறி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் பயங்கரவாதத்தை ஒழிப்பதே என்றும், அண்டை நாட்டுடன் மோதலை அதிகரிப்பதற்கான நோக்கம் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன.
பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமாக தாக்குதல்களை எதிரிகள் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நடவடிக்கைக்கு தக்க பதிலடி, சரியான இடத்தில் உரிய நேரத்தில் அளிக்கப்படும் என்றும், இந்தியாவின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது. துக்கம் சூழப் போகிறது என்றும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, எல்லைக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்கள் வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஜம்மு காஷ்மீர் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து புதன்கிழமை காலை 10 மணியளவில் விவரம் அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த திடீர் நடவடிக்கை குறித்து அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளிடமும் இந்தியா விளக்கம் அளிக்கவுள்ளது.
-
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications