என்னது போரை நிறுத்தியது டிரம்பா? கொந்தளித்த காங்கிரஸ் எம்பி சசிதரூர்! நறுக்குனு கேட்ட 4 கேள்விகள்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். இல்லாவிட்டால் பெரிய அணுஆயுத போராக மாறி இருக்கும். போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிப்பேன் என்று கூறி போரை நிறுத்தி உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார் தட்டி வருகிறார். ஆனால் அதனை நம் வெளியுறவுத்துறை முற்றிலுமாக மறுத்துள்ள நிலையில் தான் டொனால்ட் டிரம்பை, காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவிகளை கொன்றனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி நாம் அழித்தோம்.

பதிலுக்கு பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுத்த நம் நாடு பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்களை அழித்தது. பதற்றம் உச்சமடைந்த நிலையில் பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் கெஞ்சியது. மனிதாபிமான அடிப்படையில் நம் நாடும் போரை நிறுத்துவதாக அறிவித்தது. பாகிஸ்தான் அதிகாரி நேரடியாக நம் நாட்டின் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியதால் இந்த போர் நிறுத்தத்தில் வெற்றி கிடைத்தது.
ஆனால் டொனால்ட் டிரம்போ நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று மார் தட்டி வருகிறார். இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பை காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நான் தான் என்று அவர் பேசியதை சாடியுள்ளார். இதுதொடர்பாக சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
முதலில் இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து பாதிக்கப்பட்டவருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையேயான விவகாரம் என்று கூறினார். அதுமட்டுமின்றி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு அமெரிக்கா ஆதரவளித்த கடந்தகால நிலைப்பாட்டை அமெரிக்கா கவனத்தில் வைக்கவில்லை.
நாங்கள் ஒன்றும் ஒசாமா பின்லேடனை மறைத்து வைக்கவில்லை. நாங்கள் ஒன்றும் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் 26/11 நிகழ்த்தவில்லை. பயங்கரவாதிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் குற்றவாளிகளுக்கு நிகராக கருதவில்லை.
இரண்டாவது விஷயம் என்னவென்றால் டிரம்ப் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்நடவடிக்கையை தருகிறார். ஆனால் அதற்கு பாகிஸ்தான் உகந்த நாடு இல்லை. பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாட்டுடன் இந்தியா எப்போதும் பேச்சுவார்த்தையை நடத்தாது. எல்லையை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்பும் Rogue (முரட்டுத்தனம்) நாடாக பாகிஸ்தான் உள்ளது. இப்படியொரு நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட வெகுமதி வேறு எதுவும் இருக்க முடியாது.
3வது விஷயம் என்னவென்றால் காஷ்மீர் என்பது உள்நாட்டு விவகாரம். இதில் 3வது நாட்டை மத்தியஸ்தம் செய்ய இந்தியா எப்போதும் அனுமதிப்பது இல்லை. 4வது விஷயம் என்னவென்றால் பல தசாப்தங்களாக, உலக தலைவர்கள் தங்களின் இந்திய வருகையின்போது பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்று ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். 2002ம் ஆண்டில் அதிபர் கிளிண்டன் தொடங்கி எந்த அமெரிக்க அதிபரும் இந்தியா வந்து நேரடியாக பாகிஸ்தான் சென்றது இல்லை. இது இன்னொரு பின்தங்கிய நிலையாகும்'' என்று சாடியுள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications