பாகிஸ்தான் மீது அடுத்த ஆக்ஷன்? பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம்.. பின்னணி
டெல்லி: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு நம் ராணுவம் பலத்த அடி கொடுத்தது. இதில் நிலைகுலைந்த பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் கெஞ்சியது. இதையடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்த நடவடிக்கை கடந்த 7 ம் தேதி தொடங்கியது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
இதையடுத்து பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் மூலம் தாக்குதலுக்கு முயன்றது. இது நம் நாட்டின் முப்படைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் பெரும் சிக்கலில் மாட்டி கொண்டது. ஒருபுறம் நம் நாட்டின் தாக்குதலை தடுக்க முடியாமலும், மறுபுறம் நம் நாட்டை தாக்க முயன்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாலும் பாகிஸ்தான் தோல்வியை நோக்கி சென்றது.
இதையடுத்து போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. நம் நாடும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதையடுத்து போர் நிறுத்தம் அமலாகி உள்ளது. இருப்பினும் கூட பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் கொண்டு தாக்கினால் மீண்டும் பதிலடி கொடுப்போம். போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் செயல்படும் பட்சத்தில் அந்த நாட்டுக்கு பதிலடி கொடுக்க நம் முப்படைகளுக்கு சுதந்திரம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் தொடங்கியது. இதற்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மத்திய பாதகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதாவது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பெற்ற வெற்றி, அடுத்தக்கட்டமாக பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
இதுதவிர பாகிஸ்தானின் அச்சுறுத்தலை சமாளிப்பது, பயங்கரவாதிகளை வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதனை சமாளிப்பது மற்றும் பதிலடி கொடுக்கும் விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலான நடவடிக்கை இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு சில முக்கிய அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications