மோடி இங்கே வரணும்.. இ.ந்.தி.யா கட்சிகளின் பக்கா பிளான்.. சம்மட்டியடி.. நாடாளுமன்றத்தில் திணறும் பாஜக
டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. பாஜகவிற்கு இது கடும் அழுத்தத்தை கொடுத்து உள்ளது.
2014 லோக்சபா தேர்தலுக்கு முன் இந்தியா அடிக்கடி கண்ட விஷயம் என்றால் அது நாடாளுமன்ற முடக்கம்தான். நாடாளுமன்றத்தை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து பல்வேறு விஷயங்களுக்காக முடக்கியது. 2ஜி தொடங்கி விலைவாசி உயர்வு வரை பல விஷயங்களுக்காக பாஜக மொத்தமாக நாடாளுமன்றத்தை முடக்கியது.
ஆனால் அதன்பின் காங்கிரஸ் எதிர்க்கட்சியான பின் அவர்களால் இதை செய்ய முடியவில்லை. ஒரு சில சமயங்களில் நாடாளுமன்றம் முடக்கம் ஆனாலும் தொடர்ந்து நடக்கவில்லை. காரணம் எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஒரே கருத்தோடு இல்லாமல் போனதால் பாஜக மிக கடினமான மசோதாக்களான முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் போன்றவற்றை கூட மிக எளிதாக தாக்கல் செய்தது.

இந்த நிலையில்தான் இத்தனை நாட்களாக எதிர்கட்சிகளிடம் இல்லாத ஒற்றுமை நடப்பு நாடாளுமன்ற கூட்ட தொடரில் எதிரொலித்து உள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
26 கட்சிகள் மோடிக்கு எதிராக ஒன்று கூடி உள்ளனர். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. சமீபத்தில் நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
முதல் கூட்டம் பீகார்.. இரண்டாம் கட்ட கூட்டம் பெங்களூரில் நடந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டம் மும்பையில் நடக்க உள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. பாஜகவிற்கு இது கடும் அழுத்தத்தை கொடுத்து உள்ளது.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் முன் பரேட் போல கொண்டு சென்று உள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற அவமானகரமான விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் வரலாறு முழுக்க பதிவாகும் அளவிற்கு மக்கள் மனதை பாதித்து உள்ளது. அதில், நடுரோட்டில் இருந்து பொட்டை காடு ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கே இந்த பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆண்கள் அங்கே இருக்க.. பல ஆண்கள் இரண்டு பெண்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள் பலரும் தொடர்பு உண்டு என்று வீடியோக்கள் மூலம் தெளிவாகி உள்ளது. கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இப்போதுதான் வெளியாகி உள்ளது. மக்கள் இடையே இந்த வீடியோ மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் கழித்து வீடியோ வெளியான காரணத்தால் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது மணிப்பூர் மாநில போலீஸ்.
இந்த விவகாரத்தில் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவில் இருக்கும் நபர்களின் மீதும் கொலை வழக்கும் பதியப்பட்டு உள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளார்.

ராஜ்ய சபா: இந்த நிலையில்தான் நாடாளுமன்றம் கூட்டத்தொடர் கடந்த வாரம் கூடியதும் இரண்டு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் எழுப்பப்பட்டது. இன்றும் நாடாளுமன்றத்தில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் மணிப்பூர் விவகாரம் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் இது தொடர்பாக பேச முயன்றதால் அவை முடங்கியது. அவை தொடங்கும் முன் 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சார்பாக நாடாளுமன்ற அலுவல் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதனால் இன்று அவை முடங்கியது. பாஜக இதில் விவாதத்திற்கு அழைக்க.. மோடி இங்கே வர வேண்டும். அவர் வந்தால்தான் விவாதம். அதுவரை அலுவல் ஒத்திவைப்புதான் ஒரே தீர்வு என்று எதிர்க்கட்சிகள் ஒரே கருத்தோடு களமிறங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் ஒன்றாக குரல் எழுப்பி வருகின்றன.
26 கட்சிகள் மோடிக்கு எதிராக ஒன்று கூடி உள்ளனர். இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை சமாளிக்க முடியாமல் பாஜக திணறும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications