நாடாளுமன்றத்தை 3-வது நாளாக முடக்கிய எதிர்க்கட்சிகள்.. வெல்கிறதா சோனியாவின் வியூகம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தை 3-வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் முடக்கின. நாடாளுமன்றத்தை முடக்கி பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் வியூகம் நிறைவேறி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்திலேயே மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. மேலும் கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்ட 12 ராஜ்யசபா எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆனால் 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும்; லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து விவாதிக்க வேண்டும்; வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பின. இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்

2-வது நாளாக நேற்றும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. ராஜ்யசபாவில் இருந்து 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளின் எம்.பிக்களின் இரு சபைகளிலும் முழக்கங்களை எழுப்பினர். கடும் அமளிகளுக்கு இடையே சபைகள் நடைபெற்றாலும் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் நாள் முழுவதும் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

3-வது நாளாக முடக்கம்

3-வது நாளாக முடக்கம்

3-வது நாளாக இன்றும் நாடாளுமன்ற இரு சபைகளிலும் அமளி நீடித்தது. இந்த அமளிகளுக்கு இடையே சபையை நடத்த மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. இதனால் சபை நடவடிக்கைகள் 3-வது நாளாக முடங்கின. மக்களுக்கு எதிரான பிரச்சனைகளை மையப்படுத்தி முந்தைய கூட்டத் தொடரை போல முடக்க வேண்டும் என்பது காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் வியூகம். இதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறாராம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கேவிடம் இது தொடர்பான பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் சோனியா காந்தி.

சோனியா வியூகம்

சோனியா வியூகம்

எதிர்க்கட்சி தலைவர்களிடம் பேசி, காங்கிரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வைக்க வேண்டும் என்பதுதான் கார்கேவுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். அதனடிப்படையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடம் பேசியிருக்கிறார் கார்கே. ஆனால், ஆரம்பத்திலேயே காங்கிரஸ் தலைமையிலான அணியில் இணைந்து செயல்பட முடியாது என மறுத்து விட்டாராம் மமதா பானர்ஜி.

திமுக நிலைப்பாடு என்ன?

திமுக நிலைப்பாடு என்ன?

இதேபோல் திமுக தலைமையிடமும் பேசியிருக்கிறார் கார்கே. இந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மல்லிகார்ஜுனே கார்கேவின் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில், பிரச்சனைகளின் அடிப்படையில்தான் காங்கிரஸ் எடுக்கும் முயற்சிகளுக்கு திமுக ஆதரவளிக்கும். மாநில உரிமைகள் மற்றும் மக்களின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் எந்த பிரச்சனைகளையும் திமுக ஆதாரிக்காது. மேலும், மக்கள் விரோத சட்ட மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தாலும் திமுக எதிர்க்கும். இத்தகைய பிரச்சனைகளை காங்கிரஸ் எழுப்பும் போது காங்கிரசை திமுக ஆதரிக்கும் என திருச்சி சிவா எம்.பி. கூறினாராம். திமுகவின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறதாம் காங்கிரஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+