லோக்சபா: ஜாதி தெரியாத ராகுல் காந்தி-அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து விமர்சித்த பாஜக எம்பி அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் சபையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோக்சபாவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியாவை பேசவிடாமல் அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர் எதிர்க்கட்சி எம்பிக்கள்.

லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; இந்தியா கூட்டணி ஆட்சியில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

rahul gandhi Narendra Modi

இது தொடர்பாக லோக்சபாவில் நேற்று பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூர், ஜாதி எது என தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள் என ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார். இதற்கு லோக்சபாவில் ராகுல் காந்தி பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று லோக்சபா கூடியதும் ராகுல் காந்தி குறித்த விமர்சனத்துக்கு அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். அப்போது மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா பேச முயற்சித்தனர். ஆனாலும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, யாருடைய ஜாதியையும் அனுராக் தாக்கூர் கேஎட்கவில்லை. ஜாதி எது என தெரியாதவர்கள்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுவதாகவே அனுராக் தாக்கூர் கூறியிருந்தார். யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அப்படி பேசும்போது உங்களைத்தான் சொல்வதாக ஏன் நினைக்க வேண்டும்? இது தொடர்பாக லோக்சபாவிலேயே அனுராக் தாக்கூர் விளக்கம் கொடுத்துவிட்டார். ஜவஹர்லால் நேரு தொடங்கி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அனைவருமே இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள்தான் என்பது வரலாறு என்றார்.

காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், தலித்துகள், ஓபிசி மற்றும் பழங்குடிகளுக்காக ராகுல் காந்தி குரல் கொடுக்கிறார். அனுராக் தாக்கூரின் பேச்சு அகம்பாவத்தின் வெளிப்பாடு என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+