திருப்பரங்குன்றம்: நீதிபதிக்கு சப்போர்ட் செய்த அமித்ஷா! எதிர்க்கட்சி எம்பிக்கள் கொத்தாக வெளிநடப்பு
டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், வாக்கு வங்கியை கவரவே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமித்ஷா மக்களவையில் விமர்சித்திருந்தார். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் இந்த விவகாரம் குறித்து அமித்ஷா பேசுகையில், "நீதிமன்ற வழக்கில் தோற்றால் உடனடியாக இந்தியா கூட்டணியினர் நீதிபதியை குற்றம்சாட்ட தொடங்கிவிடுகின்றனர். தேர்தலில் தோற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குற்றம்சாட்டுகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான அவர்களின் குற்றச்சாட்டுகளை யாரும் கவனிக்காததால் இப்போது வாக்கு திருட்டு என்று குற்றம்சாட்டை கொண்டு வருகின்றனர்.

நீதிபதி தீர்ப்பு கொடுத்தார் என்பதற்காக அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக பதவி நீக்க தீர்மானமா? இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான். எனவே இந்த நாட்டின் மக்கள் மக்கள் ஒருபோதும் இந்தியா கூட்டணிக்கு உதவி செய்ய மாட்டார்கள்" என்று கூறினார். ஏற்கெனவே காங்கிரஸ் எம்பிக்கள், வாக்கு திருட்டு குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்களுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications