சாபமிட்ட அமித்ஷா.. திமுக + எதிர்க்கட்சிகள் ஷாக்.. மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்ததால் ஆக்ரோஷம்
டெல்லி: ''இன்று லோக்சபாவில் மிகவும் விசித்திரமான ஒரு காட்சி அரங்கேறியது. பெண்களுக்கான இடஒதுக்கீடுக்கு தேவையான அரசியலமைப்பு திருத்த மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நிறைவேற்ற விடாமல் தடுத்தன. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதை முதல் முறையாக செய்யவில்லை. மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. இதனால் எதிர்க்கட்சிகள் 2029 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களின் கோபத்தை எதிர்கொள்வார்கள்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாபமிட்டுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டுக்கான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026, மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill 2026) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 ஆகியவற்றின் மீது லோக்சபாவில் இன்று ஓட்டெடுப்பு நடந்தது. 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு இருந்தால் இந்த மசோதா வெற்றி பெறும். ஆனால் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை.

இதனால் எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவையானதாக இருந்தது. ஆனால் 3 மசோதாக்களையும் தனித்தனியே கொண்டு வந்திருந்தால் எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள்.
ஆனால் மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடன் சேர்த்து தொகுதி மறுவரையறை மசோதாவையும் கொண்டு வந்தது. இதற்கு ஆதரவு அளித்தால் தொகுதி மறுவரையறையை மத்திய அரசால் செய்ய முடியும். இதனால் அந்த மசோதாவை திமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. லோக்சபாவில் நடந்த வாக்கெடுப்பில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. மசோதா மீதான வாக்கெடுப்பில் 489 எம்பிக்கள் பங்கேற்றனர். மசோதாவுக்கு ஆதரவாக 278 பேர் வாக்களித்தனர். எதிராக 211 பேர் வாக்களித்தனர். மசோதா நிறைவேற்ற 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் லோக்சபாவில் மசோதா தோல்வியடைந்தது.

இந்நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அமித்ஷா, ''இன்று லோக்சபாவில் மிகவும் விசித்திரமான ஒரு காட்சி அரங்கேறியது.
நாரி சக்தி வந்தன் அதினியத்திற்கான (பெண்கள் இடஒதுக்கீடு) தேவையான அரசியலமைப்பு திருத்த மசோதாவை, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நிறைவேற விடாமல் தடுத்தன.
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் ஒரு மசோதாவை முடக்குவதும், அந்தச் செயலைக் கொண்டாடுவதும், அதை உற்சாகப்படுத்துவதும் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயல் கற்பனைக்கு அப்பாற்பட்டது.
இப்போது, இந்த நாட்டின் பெண்களுக்கு லோக்சபாவிலும், சட்டசபைகளிலும் அவர்களுக்கான 33% இட ஒதுக்கீடு மறுக்கப்படும்.
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதை முதல் முறையாக செய்யவில்லை. மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. அவர்களின் மனநிலை என்பது பெண்களின் நலன்களுக்கோ அல்லது நாட்டின் நலன்களுக்கோ உதவவில்லை. பெண்களின் இடஒதுக்கீட்டுக்கு இழைக்கப்படும் இந்த அவமதிப்பு இதோடு முடிந்துவிடாது. இன்னும் நீண்டகாலம் எதிரொலிக்கும் என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள் 2029 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களின் கோபத்தை எதிர்கொள்வார்கள்'' என்று ஆக்ரோஷமாக பதிவிட்டுள்ளார்.
-
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்

Click it and Unblock the Notifications