ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் இருப்பது நாயின் உருவமா? அல்லது மனிதனா?.. கண்டுபிடிங்க பாஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருப்பு நிறத்தில் தெரிவது நாயின் உருவமா?.. அல்லது மனிதனின் உருவமா?.. என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?..

ஆப்டிகல் இல்யூஷன் என சொல்லப்படும் ஒளி மாயை புகைப்படங்கள் நமது கவனிப்புத்திறனை சோதிப்பவை.

முதலில் பார்த்தால் ஒரு மாதிரியாகவும் ஆழ்ந்து பார்த்தால் வேறு மாதிரியாகவும் இருக்கக்கூடிய இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.

 சுவாரசியம் மிக்க படங்கள்

சுவாரசியம் மிக்க படங்கள்

ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் போது, சுவாரசியமாகவும் சவால் மிக்கதாகவும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதால் நண்பர்களுக்குள் இந்த படங்களை பலரும் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் விடையை கண்டுபிடிக்க போட்டா போட்டியும் நடக்கும். இப்படி போட்டி உணர்வையும் ஊக்கப்படுத்தும் இத்தகைய இல்யூஷன் படங்கள் இப்போதெல்லாம் நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படம்

ஆப்டிகல் இல்யூஷன் படம்

அந்த வகையில் இன்று ட்விட்டரில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த படத்தில் இருப்பது என்னவென்று தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பி போய் இருக்கின்றனர். அந்த படத்தில் இருக்கும் உருவன் என்னவென்று நெட்டிசன்களின் கண்களை குழப்பிக்கொண்டு இருக்கிறது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம்.

 நாயின் உருவமா?

நாயின் உருவமா?

சரி அப்படி என்ன தான்இந்த இமேஜில் இருக்கிறது என்றால், பனிபடர்ந்த ஒரு பகுதியில் கருப்பு நிறத்தில் ஒரு உருவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் அந்த உருவம் நமது கண்களுக்கு எப்படி தெரிகிறது என்பதாக இந்த சவால் இருக்கிறது. அதாவது கருப்பு நிறத்தில் இருப்பது நாயின் உருவமா? அல்லது மனிதனின் உருவமா?.. என்று பார்ப்பவர்களை ஒரு நிமிடம் தலைசுற்ற வைக்கிறது.

கண்டுபிடித்தீர்களா

கண்டுபிடித்தீர்களா

டிவிட்டரில் வெளியான இந்த பதிவுக்கு கீழே பலரும் நாய் தான் எனக்கு தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் நாயும் மனித உருவமும் இரண்டும் சேர்ந்தே தெரிகிறது. என பதிவிட்டு வருகின்றனர். சரி அதில் என்னதான் இருக்குன்னு... இவ்வளவு நேரம் பார்த்தாலும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் நாங்களே விடையை சொல்லிடுறோம். இந்த இல்யூஷன் படத்தில் நாயின் உருவம்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தான் காரணம்

இது தான் காரணம்

நாயின் பின் வால் பகுதி மனிதனின் தலை போல இருப்பதாக தெரிகிறது. மனிதன் பேக் அணிந்து இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல நாயின் முகம் தெரிவதால் இந்த படம் நம்மை இப்படி போட்டு குழப்புவதற்கு காரணம். இருந்தாலும் எப்படி பார்த்தாலும் இரண்டுக்கும் நியாயம் சேர்க்கும் வகையிலான ஒரு சவாலான இல்யூஷன் படம் தான் இது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+