ஆப்டிகல் இல்யூஷன்: செடிக்குள் மறைந்து இருக்கும் "தவளை".. கண்டுபிடிச்சா உண்மையில் நீங்க கிரேட்!
டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தவளை ஒன்று மறைந்திருக்கிறது. இந்த தவளையை 8 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கிரேட் தான்.
நமது கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் இல்யூஷன் படங்களுக்கு எப்போதும் இணையத்தில் வரவேற்பு அதிகமாக இருக்கும்.
பொதுவாக இல்யூஷன் படங்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அறிவுத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை ஓரளவு கணித்துவிடக்கூடிய ஒருவகை இல்யூஷன் படங்கள் உள்ளன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்
அதேபோல், நமது கேரக்டர் பற்றி கணிக்கும் வகையிலான ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் உள்ளன. இத்தகைய இல்யூஷன் படங்கள் சவால் மிக்கதும் நமது அறிவுக்கூர்மையை சோதிக்கும் வகையிலும் இருப்பதால் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்படுகிறது. அதுவும் காலை வேளைகளில் நமது மூளையை புத்துணர்ச்சியாக்கவும் சுறு சுறுப்பாக பணி செய்யவும் வைக்கும் வகையில் இல்யூஷன் படங்கள் இருக்கிறது என்றே சொல்லலாம்.

விடைகள் எதுவும் நேரடியாக இருக்காது
இதற்காக சில தேர்வுகளில் கூட இப்போது இல்யூஷன் படங்களை வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. சுருக்கமான சொன்னால், கானல் நீரை எடுத்துக்கொள்ளுங்கள்.. தொலைவில் இருந்து பார்ப்பதற்கு நீர் ஓடுவது போல தெரியும். ஆனால், நெருங்கிச்சென்றால் ஒன்றும் இருக்காது. அதே மாதிரிதான்.. மேலோட்டமாக ஒருமாதிரியாகவும் ஆழ்ந்து பார்த்தால் வேறு மாதிரியும் இல்யூஷன் படங்கள் இருக்கும். மொத்தத்தில் விடைகள் எதுவும் நேரடியாக இருக்காது.

சவாலுக்கு ரெடியா..
அந்த வகையில் இன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள இல்யூஷன் படத்தில் ஒளிந்து இருக்கும் தவளையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே ஆகும். அதுவும் 8 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான டாஸ்க்... என்ன சவாலுக்கு ரெடியா இருக்கிங்களா.. சரி கேமிற்குள் செல்லலாம்...

8 வினாடிகளுக்குள்..
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் பசுமை நிறைந்த செடி ஒன்றில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. கண்களை கவரும் வகையில் அமைந்து இருக்கும் இந்த படத்தில் தவளை ஒன்று மறைந்து இருக்கிறது. படத்தை உற்று பாருங்கள்.. 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிங்க பார்க்கலாம்... பலரும் இந்த செடிக்கு மத்தியில் மறைந்து இருக்கும் தவளையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்..

எங்கே இருக்கிறது?
கண்டுபிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். நாங்களே ஐடியா கொடுக்கிறோம்.. அதை வைத்தே ஈசியா கண்டுபிடிச்சிடலாம். முதல் ஐடியா என்னவென்றால், தவளை என்றதும் நமது ஊரில் கிணற்றுப்பக்கமும் குளத்துப் பக்கமும் தென்படும் தவளை நிறத்தில் இருக்கும் என்று நினைத்து தேடி விடாதீர்கள்.. இங்கே ஒளிஞ்சிருக்கும் தவளை பச்சை நிறம் கொண்டது. இப்போது பலரும் விடையை கண்டுபிடிச்சு இருப்பீங்கன்னு நினைக்கிறோம்..

இடது பக்கத்தில் தேட வேண்டாம்
அப்பவும் கண்டுபிடிக்கலன்னாலும் ஒன்னும் பிரச்சினையில்லை... இன்னொரு ஐடியா கொடுக்கிறோம்.. படத்தின் இடது பக்கத்தில் தவளையை தேடிக் கொண்டு இருக்க வேண்டாம். படத்தின் வலது பக்கம் மட்டுமே உங்கள் கவனத்தை செலுத்தி பாருங்கள்.. இப்போது தவளை ஒளிந்து இருக்கும் இடம் ஈசியா தெரிஞ்சு இருக்கும்.. அப்படியும் தெரியாவதவர்களுக்கு தவளை மறைந்து இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதைப்பார்த்து உங்கள் விடையை சரிபார்த்துக்கொள்ளலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications