கோடிக்கணக்கானவர்களுக்கு பலன்.. விவசாயிகள் நலன் காப்பதில் உறுதியாக உள்ளோம்.. பிரதமர் மோடி
டெல்லி: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ. 340 ஆக வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் முடிவு வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:-

கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 8% அதாவது ரூ. 315-லிருந்து 340 ஆக உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். இதுவரை இல்லாத அளவில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ. 340 வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்" என்றார்.
இந்நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் முடிவு வரலாற்று சிறப்புமிக்கது என பாராட்டியுள்ள பிரதமர் மோடி, விவசாயிகள் நலனில் எப்போதும் அக்கறையாக உள்ள தனது அரசுக்கும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
நமது விவசாய சகோதர சகோதரிகளின் அனைத்து நலன்களையும் பூர்த்தி செய்வதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. இந்த அடிப்படையில், கரும்பு கொள்முதல் விலை உயர்வு என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகளுக்கு இந்த முடிவு பலனளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications