நாங்கள் இப்போது செய்யும் பணி.. அடுத்த 1000 ஆண்டுகளுக்கு பேசப்படும்! பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய பிரதமர் மோடி பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த நிலையில், இப்போது மீண்டும் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இப்போது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் இப்போது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்கிறது. கடந்த மாதம் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், 3 நாட்களாக இது தொடர்பான விவாதம் நடந்து வருகிறது.
இதில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்தனர். ராகுல் காந்தி முதல் நாள் விவாதத்தில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் அப்போது அவர் பேசவில்லை. மாறாக இரண்டாம் நாளான நேற்று ராகுல் காந்தி பேசினார். அவர் மத்திய அரசுக்கு எதிராகக் காட்டமான கருத்துகளை முன்வைத்தார்.
இதற்கிடையே இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது தங்கள் கட்சிகள் சதமடித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் நோ பால்களை வீசி வருவதாகவும் தெரிவித்தார். ஒரு முறை மட்டுமின்றி தொடர்ச்சியாக நோ பால்களை வீசுவதாகக் குறிப்பிட்டார். முதல் நாளில் ராகுல் காந்தி பேசாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலேயே இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும் பிரதமர் மோடி, "மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருக்கும் போதிலும் அவருக்குப் பேச வாய்ப்பு தரவில்லை. காங்கிரஸ் அவரை ஓரம்கட்டுகிறது. அவர்களுக்கு மேற்கு வங்கத்தில் இருந்து இதற்கான அறிவுறுத்தல் வந்திருக்கும் என நினைக்கிறேன்.. நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் 1000 ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும்
ஊழல், முறைகேடு, மோசடி இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. இது இந்தியாவிற்கான பொன்னான வாய்ப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.. அதள பாதாளத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்திக் கொண்டு வந்துள்ளோம்... அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமைமிக்க இந்தியாவை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பாஜகவுக்கு இந்திய இளைஞர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்திய இளைஞர்களுக்கு நாங்கள் பல திட்டங்களைக் கொண்டு வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இதில் அவர் இந்தியா கூட்டணியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications