திரும்பும் பக்கமெல்லாம் ஆளும் கட்சியே வெற்றி... மக்கள் மனதில் திடீர் மாற்றம்.. உணர்த்துவது என்ன
டெல்லி: நடைபெற்ற முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி தக்க வைக்கும் என தற்போது வரை வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளில் தெரிய வருகிறது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி என ஐந்து மாநிலங்களின் சட்டசபை இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதிய சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்திற்கு எட்டு கட்டமாகவும், அசாம் மாநிலத்திற்கும் 3 கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டன. மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 143 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 90 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேபோல புதுவையிலும் எதிர்க்கட்சியாக இருந்து என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் இடதுசாரிகள்
அதேநேரம் இவை தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் ஆளும்கட்சியே மீன்டும் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் முன்னிலையில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் இடதுசாரிகள் 92 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் மட்டுமே முன்னணியில் உள்ளன.

Array
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200+ இடங்களில் முன்னிலையில் உள்ளது. அங்கு பாஜக சுமார் 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அசாம் மாநிலத்திலும் மீண்டும் பாஜக ஆட்சியே தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அங்கு 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 75 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.

மக்கள் மனதில் மாற்றம்
பொதுவாகவே ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு மனநிலை இருக்கும். அதைத் தாண்டி தேர்தலில் வாக்குகளை பெறுவது ஆளும்கட்சியினருக்கு சிரமமாகவே இருக்கும். கடந்த காலங்களில் பல மாநிலங்களில் இப்படி மாறி மாறி ஆட்சி அமைந்துள்ளன. ஆனால், இப்போது மக்களின் மனநிலை மாறுவது இந்தத் தேர்தலில் தெரிகிறது.

மீண்டும் வாய்ப்பு
அதாவது சிறப்பான முறையில் ஆட்சி செய்யும் கட்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தர மக்கள் தயாராகவே உள்ளனர். இதன் காரணமாகவே சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் ஒரே கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக மம்தா ஆட்சி அமைக்கவுள்ளார்.

மக்கள் தயார்
அசாமில் தொடர்ந்து பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அதாவது ஆட்சியில் இருப்பதால் மட்டுமே மக்கள் எதிர்ப்பு காரணமாக ஒரு கட்சி தோல்வி அடைந்து விடுவதில்லை. மக்கலை திருப்திபடுத்தும் வகையில் ஆட்சி இல்லையென்றால் மட்டுமே மக்கள் மாற்றத்தை நோக்கி செல்கிறார்கள். மாற்று கட்சியினருக்கு வாக்களிக்கின்றனர். அப்படி இல்லையென்றால் ஆளும்கட்சிக்கு மீன்டும் வாய்ப்பளிக்க அவர்கள் தயாராகவே உள்ளனர் என்பது இதில் தெரிகிறது.
-
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications