அணு ஆயுத பவர்.. இந்தியா பாகிஸ்தானில்.. எந்த நாட்டிற்கு நியூக்ளியர் சக்தி அதிகம் உள்ளது? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இரண்டு அணு சக்தி நாடுகளில் எந்த நாட்டிற்கு அதிக அணு சக்தி உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.

பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.

இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.

Out of India and Pakistan Which country has more NUCLEAR POWER NUKE analysis

அணு சக்தி

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இரண்டு அணு சக்தி நாடுகளில் எந்த நாட்டிற்கு அதிக அணு சக்தி உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.

இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பீடு

அணுசக்தி திறன் அணு ஆயுதங்கள்:

இந்தியா: ~160
பாகிஸ்தான்: ~165

விநியோக அமைப்புகள்:

இந்தியா: நிலம், காற்று, கடல் சார்ந்தது
பாகிஸ்தான்: முதன்மையாக நிலம் மற்றும் வான் அடிப்படையிலானது இந்தியாவை விட பாகிஸ்தானிடம் கூடுதலாக 5 அணு ஆயுதங்கள் இருந்தாலும். இந்தியாவிடம் உள்ளது கூடுதல் பலம் வாய்ந்தது. அதோடு இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்கள் மூலம் அதிக தூரத்திற்கு தாக்க முடியும். அதோடு நிலம், காற்று, கடல் என்று 3 வழிகளில் தாக்குதல் நடத்த முடியும்.

அணு கோட்பாடு:

இந்தியா: தனியாக பயன்பாட்டுக் கொள்கை இல்லை
பாகிஸ்தான்: அறிவிக்கப்பட்ட கொள்கை இல்லை (தெளிவற்ற நிலைப்பாடு)

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒருவேளை போர் வெடித்தால், மனிதவளம், பாதுகாப்பு பட்ஜெட் மற்றும் நிலம், வான் மற்றும் கடல் படைகள், இராணுவ சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் கையே மேலோங்கி இருக்கும். ரஃபேல் போன்ற மேம்பட்ட போர் விமானங்கள், இரண்டு விமானம் தாங்கிகள், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், விரிவான ஏவுகணை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வலையமைப்பு உள்ளிட்ட பெரிய மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆயுத பாதுகாப்பை இந்தியா கொண்டுள்ளது. அதிநவீன ராணுவ பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்த உள்ள காரணத்தால் இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் மிகவும் பல்வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் , பாகிஸ்தானின் பலம் அது எப்போதும் தயார் நிலையில் இருப்பது. அதோடு infiltrators எனப்படும் தீவிரவாத அமைப்புகளின் ஊடுருவிகள் காஷ்மீரில் இருப்பது. சீனாவுடனான பாகிஸ்தானின் நெருங்கிய இராணுவ உறவுகள் இந்தியாவிற்கு சவாலாக இருக்கும். அதோடு அவர்களின் அணுசக்தி திறன் இந்தியாவை விட அதிகம். ஆனாலும் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் இந்தியா பக்கம் நிற்கும் என்பது இந்தியாவிற்கு கூடுதல் பலம்.

மற்ற ராணுவ பலம்

பொது புள்ளிவிவரங்கள்: உலகளாவிய ஆற்றல் குறியீட்டு தரவரிசை:

இந்தியா: 4வது
பாகிஸ்தான்: 9வது

செயலில் உள்ள ராணுவப் பணியாளர்கள்:

இந்தியா: ~1.45 மில்லியன்
பாகிஸ்தான்: ~654,000

பாதுகாப்பு பட்ஜெட்:

இந்தியா: ~$81 பில்லியன்
பாகிஸ்தான்: ~$11 பில்லியன்

Take a Poll

ராணுவ பலம்

டாங்கிகள்:

இந்தியா: ~4,800
பாகிஸ்தான்: ~3,700

கவச வாகனங்கள்:

இந்தியா: ~12,000
பாகிஸ்தான்: ~10,000

பீரங்கி (மொத்தம்):

இந்தியா: ~7,500+
பாகிஸ்தான்: ~4,300+

விமானப்படை
மொத்த விமானம்:

இந்தியா: ~2,200
பாகிஸ்தான்: ~1,400

போர் விமானங்கள்:

இந்தியா: ~600 (Su-30MKI, Rafale, Tejas போன்றவை)
பாகிஸ்தான்: ~430 (JF-17, F-16, முதலியன)

ஹெலிகாப்டர்கள்:

இந்தியா: ~800+
பாகிஸ்தான்: ~300+

போக்குவரத்து விமானம்:

இந்தியா: ~250+
பாகிஸ்தான்: ~70+

கடற்படைப் படைகள்
மொத்த கடற்படை சொத்துக்கள்:

இந்தியா: ~295
பாகிஸ்தான்: ~114

விமானம் தாங்கிகள்:

இந்தியா: 2 (ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த்)
பாகிஸ்தான்: 0

நீர்மூழ்கிக் கப்பல்கள்:

இந்தியா: 17 (அணுசக்தியில் இயங்குவது உட்பட)
பாகிஸ்தான்: 9 (டீசல்-மின்சாரம்)

போர்க்கப்பல்கள் மற்றும் அழிப்பான்கள்:

இந்தியா: ~30+
பாகிஸ்தான்: ~10+

இதில்தான் Precision Strike முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. Precision Strike முறையில் முதலில் ஒரு பகுதியில் உள்ள தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் உறுதி செய்யப்படும். அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மற்றும் குறிக்கப்படும். இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்.அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும்.

உளவு பணிகள் முடிந்த பின் தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்படும். எப்படி உள்ளே செல்வது எப்படி வெளியே வருவது.. என்ன மாதிரியான தாக்குதலை நடத்துவது என்று உறுதி செய்யப்படும். தேதி முடிவெடுக்கப்படாது. விமான தாக்குதல் என்றால் எப்படி உள்ளே செல்வது.. தரைவழி தாக்குதல் என்றால் எப்படி நடத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டு பிளான் செய்யப்படும்.

இது உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறும். கடைசியாக பிரதமர் ஒப்புதல் அளித்த பின் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும். தாக்குதல் நடத்தப்படுவது.. தாக்குதல் தினத்தின் 3-4 மணி நேரங்களுக்கு முன்புதான் வீரர்களுக்கே சொல்லப்படும். தாக்குதல்கள் கசிவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+