ஆட்சியை பறிகொடுத்த ஆம் ஆத்மி.. தனது வெற்றியை டான்ஸ் ஆடி கொண்டாடிய முதல்வர் அதிஷி!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியைப் பற்கொடுத்த நிலையிலும், கல்கஜி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற டெல்லி முதலமைச்சர் அதிஷி, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நடனம் ஆடினார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஸ்டார் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். ஆட்சியை பிடிக்க 36 இடங்கள் தேவை என்றி நிலையில் 49 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தாங்கள் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

தனிப் பெரும்பான்மையுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. பாஜகவின் வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கெஜ்ரிவால் தோல்வி - அதிஷி வெற்றி
டெல்லி சட்டசபை தேர்தலில் கல்கஜி தொகுதியில், டெல்லி முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவின் ரமேஷ் பிதூரி போட்டியிட்டார். கல்கஜி தொகுதியில் பதிவான வாக்குகள் 12 சுற்றுகளாக எண்ணப்பட்டன. பாஜகவின் ரமேஷ்தான் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தார். அதிஷிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என ஆம் ஆத்மி கட்சியினரே சோர்ந்து போயினர்.
இந்நிலையில், 7வது ரவுண்டில் திடீரென லீட் எடுத்து, பாஜக வேட்பாளர் ரமேஷை ஓவர் டேக் செய்தார் அதிஷி. அதன்பின் இறுதி வரை முன்னிலையில் இருந்த அவர், 3,521 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா உட்பட பெருந்தலைகளே தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.
ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி
புதுடெல்லி தொகுதியில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். 3 முறை டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் படுதோல்வி அடைந்துள்ளார். 2013, 2015, 2020 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அரவிந்த் கெஜ்ரிவால் இந்த முறை முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.
கெஜ்ரிவால் தோல்வியோடு, ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கூறிய அதிஷி, "டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோற்றது பெரும் பின்னடைவுதான். மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.
அதிஷி உற்சாக நடனம்
இந்நிலையில், கல்கஜி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் அதிஷி, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நடனம் ஆடினார். வெற்றிக் கொண்டாட்டத்தில் கட்சியினருடன் இணைந்து சிரித்தபடி பாடலுக்கு நடனம் ஆடினார் அதிஷி. ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியைப் பறிகொடுத்துள்ள நிலையில், பதவியில் இருந்து வெளியேறும் முதல்வர் அதிஷி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications