ஒரே நாளில் 1.2 கோடி பேர் இலவச தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு.. எப்போது போடலாம்
டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட 1.2 கோடி பேர் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து தகவல்கள் இல்லை.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி போட முன்பதிவு புதன்கிழமை நாடு முழுவதும் தொடங்கியது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 55லட்சத்து 51 ஆயிரத்து 744 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக http.//www.cowin.gov.in என்ற இணையதளத்திலும், ஆரோக்கிய சேது ஆப்பிலும் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

முன்பதிவு
இதற்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கியது. இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்து கொண்டனர். முன்பதிவு செய்தவர்கள், மே 1ம் தேதி அந்தந்த தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 நிமிடம் காத்திருப்பு
இந்நிலையில் 18 வயதுக்கும் மேற்பட்ட பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள நேற்று இணையதளம் மற்றும் செல்போன் மூலம் முன்பதிவு செய்ய முயன்றதால் சிக்கல் ஏற்பட்டது. இணையதளத்திற்குள் நுழைந்து செல்போன் எண்ணை உள்ளீடு செய்யும் போது ஒடிபி எண் கிடைக்கும்.. பலர் செல்போன் எண்ணை ஒரே நேரத்தில் உள்ளீடு செய்ததால் ஒடிபி பலருக்கு 3நிமிடம் கழித்தே வந்தது. சிலருக்கும் 3 நிமிடம் கழித்தும் வரவில்லை ஒடிபியை உள்ளீடு செய்ய 3 நிமிடம் மட்டுமே அவகாசம் தரப்பட்டதால் பலராலும் உள்ளீடு செய்ய இயலவில்லை. இதனால் நேற்று பலர் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

எவ்வளவு சாத்தியம்
பிற்பகல் 4 மணிக்கு தொடங்கிய உடன் 90 சதவீதம் பேர் ஒரேநேரத்தில் முன்பதிவு செய்தனர். மாலை 4 மணி முதல் இரவு 7மணிக்குள் 383 மில்லியன் பேர் பதிவு செய்ய ஆன்லைனில் குவிந்தனர். இதனால் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக நேற்று ஒரே நாளில் 1.23 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மே1ம் தேதியே தடுப்பூசி போடுவது சாத்தியம் இல்லாதது என்கிறார்கள்.

தடுப்பூசி போடப்படும்
பல்வேறு மாநிலங்கள் மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி போடப்போவதாக அறிவித்துள்ளன. ஆனால் மருந்து அவர்களுக்கு கிடைத்துள்ள அளவின் அடிப்படையிலேயே தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவார்கள் என்று தெரிகிறது. சில மாநிலங்களில் மே1ம் தேதி தொடங்குவது கூட தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்து தடுப்பூசி போட வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications