டெல்லி பிஜி ஹாஸ்டலில் பயங்கர தீ விபத்து.. சிக்கிய ஏராளமான பெண்கள்..விரைந்து வந்து தீயணைப்பு வாகனங்கள்
டெல்லி: டெல்லியில் பெண்கள் தங்கியிருந்த 3 அடுக்குமாடி கொண்ட விடுதியில் (பிஜி ) திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த கட்டிடத்தில் சிக்கியிருந்த 35 க்கும் மேற்பட்ட பெண்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். வேறு யாராவது சிக்கி உள்ளார்களா என்று தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடினர். நல்லவேளையாக பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை.
வடக்கு டெல்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து 3.5 கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது முகர்ஜி நகர். இங்கு சிக்னேச்சர் என்ற பெயரில் 3மாடி கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்று இருக்கிறது.இதில் பணம் கொடுத்து பெண்கள் தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் இரவு 7.45 மணியளவில் சிக்னேச்சர் அபார்ட்மெண்டில் இருந்து தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு அழைப்பு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த 20 தீயணைப்பு வாகனங்களை தீயணைப்புத் துறையினர் உடனடியாக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட அபார்ட்மெண்டில் சிக்கிய இருந்த சுமார் 35 பெண்களை மீட்ட அதிகாரிகள், தற்போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனிடையே தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்த அதிகாரிகள், அப்பார்ட்மெண்டில் படிக்கட்டுக்கு அருகில் இருந்த மின் மீட்டர் பலகையில் இருந்து திடீரென தீ பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென பரவியது. மொட்டை மாடியில் சமையலறையுடன் கூடிய மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளங்களுக்கும் பரவி இருக்கிறது.
தீ பயங்கரமாக பரவி, தீப்பிழம்பாகவும் புகை மண்டலமாகவும் அப்பார்ட்மெண்ட் மாறத் தொடங்கிய நிலையில், தக்க சமயத்தில் வந்து தீயை அணைத்துள்ளனர் தீயணைப்பு துறையினர். இந்த சம்பவம் டெல்லியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
ஸ்தம்பித்த டெல்லி.. இனி இளைஞர்கள் பயப்படமாட்டார்கள்.. CJP பதிவால் மத்திய அரசு ஷாக்! -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications