POk-வில் பயங்கரவாத முகாம்கள் மீது பாய்ந்த ஏவுகணைகள்.. இந்தியா தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி
டெல்லி: காஷ்மீரின் அமைதியை குலைக்கும் வகையில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகீதின் ஆகிய பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் இந்திய மண்ணில் இருந்து கொண்டே பயங்கரவாத முகாம்களை டார்கெட் செய்து இந்த தாக்குதலை இந்தியா முன்னெடுத்து உள்ளது.

ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகீதின் ஆகிய பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காத பாகிஸ்தான் நிலைகுலைந்துள்ளது. இந்தியா நடத்தியிருக்க கூடிய இந்த தாக்குதலில் 80 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன.
பஹவல்பூர் மற்றும் முரிட்கேவில் உள்ள முகாம்களில் தான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரண்டு முகாம்களிலும் 25 முதல் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிற பயங்கரவாத முகாம்களில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற விவரங்களை இந்தியா இன்னும் சேகரித்து வருகிறது.
இந்தியாவின் முப்படைகள் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்'- தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் குறி வைக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதையும் இந்தியா குறிவைக்கவில்லை.
பவல்பூர், சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதேபோல, சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள பயங்கரவாத முகாம்களில் மட்டும் தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தி இருந்தன.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications