10 ஆண்டுகளில் 89,441 அரசுப் பள்ளிகள் மூடல்.. தமிழ்நாட்டின் நிலை என்ன? அசத்திய தென் மாநிலங்கள்!
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 30 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குச் சத்துணவு திட்டம், இலவச பஸ் பாஸ், சீருடை, புத்தகம், புத்தகப் பை, சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசுப் பள்ளியில் படித்து முடித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்குப் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 3 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மூடப்பட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பாஜக ஆட்சியில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலம் முதலிடத்தை இருக்கிறது.
2014 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 29,410 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் உத்தரப் பிரதேச மாநில இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25,126 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல் நாட்டிலேயே அதிக அரசுப் பள்ளிகள் இருக்கும் மாநிலமும் உத்தர பிரதேசம்தான்.
தொடர்ந்து பட்டியலில் ஒடிசா, அசாம், ஜார்க்கண்ட், காஷ்மீர் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் இருக்கின்றன. ஒடிசாவில் 10,026 பள்ளிகளும், அசாமில் 7,919 அரசுப் பள்ளிகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5,527 அரசுப் பள்ளிகளும், ஜாஷ்மீரில் 5,089 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதன்பின் மகாராஷ்டிராவில் 2,560 அரசுப் பள்ளிகளும், ஆந்திரப் பிரதேசத்தில் 1,666 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கின்றன.
தொடர்ந்து உத்தராகண்டில் 1,552 பள்ளிகளும், பஞ்சாப் மாநிலத்தில் 1,530 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கின்றன. இந்த பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. ஆனால் மாநிலங்களில் குறைந்த அளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது தமிழ்நாட்டில் தான். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 239 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.
ஏனைய தென் மாநிலங்களில் கர்நாடகாவில் 1,180 அரசுப் பள்ளிகளும், தெலங்கானாவில் 754 அரசுப் பள்ளிகளும், கேரளாவில் 295 அரசுப் பள்ளிகளும், ஆந்திராவில் 1,666 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பெற்றோர் தங்களின் குழந்தைகளைத் தனியார்ப் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புவதால், அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசுப் பள்ளியின் தரமும் பெற்றோர் தனியார்ப் பள்ளியை நோக்கிச் செல்வதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications