சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20,97,053 கோடி எப்படி.. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்
டெல்லி: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20,97,053 கோடி பொருளாதார பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20.97 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார பேக்கேஜ் அறிவிக்கப்படும் என்று கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது அறிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பின் படி பொருளாதார சிறப்பு திட்டங்களை கடந்த ஐந்து நாட்களாக தினசரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். முதல் கட்டமாக அறிவித்த திட்டங்களின் மதிப்பு 5,94,550 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூ. 3,10,000 கோடி என்று டுவிட்டரில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
3ம் கட்டமாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூ.1,50,000 கோடி என்றும், 4வது மற்றும் ஐந்தாம் கட்ட திட்டங்களின் மதிப்பு 48100 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.
The overall stimulus provided by the #AatmanirbharBharat Package amounts to Rs 20,97,053 crore: Smt @nsitharaman #AatmaNirbharApnaBharat pic.twitter.com/Hns6KVyiJ5
— NSitharamanOffice (@nsitharamanoffc) May 17, 2020
இப்படி ஐந்து கட்டமாக அறிவிக்கப்பட்ட மொத்த திட்டங்களின் மதிப்பு 1102650 கோடி ஆகும். ஏற்கனவே பிஎம்ஜிகேபி திட்டத்திற்கு 192 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் ரூ. 801603 கோடி மதிப்புள்ள திட்டங்கள் ஆகும். எனவே ஒட்டுமொத்தமாக 2097053 கோடி ரூபாய்கு பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்பில் 40000 கோடி 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறைக்கு இதுவரை 15000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாவும் கூறினார். மேலும் இவரை விவசாயிகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்திற்காக 16,294 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு மொத்தம் ரூ.10,025 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications