106 நாள் கோபம்.. 1 மணி நேரம் பிரஸ் மீட்.. வாழ்நாளிலேயே கோபமான பேட்டி.. ப.சிதம்பரம் இஸ் பேக்!

106 நாட்கள் சிறையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது வாழ்நாளிலேயே ஆகச்சிறந்த கோபமான பேட்டியை இன்று அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Govt turned out to be incompetent manager of economy P Chidambaram

    டெல்லி: 106 நாட்கள் சிறையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது வாழ்நாளிலேயே ஆகச்சிறந்த கோபமான பேட்டியை இன்று அளித்துள்ளார். மத்திய அரசு மீது தனக்கு இருக்கும் கோபத்தை எல்லாம் அவர் தனது பேட்டியில் வெளிப்படுத்தினார்.

    106 நாட்களுக்கு முன் சிறைக்கு செல்லும் முன், சிபிஐ தன்னை கைது செய்யும் முன் காங்கிரஸ் தலைமையகத்தில் வைத்து ப. சிதம்பரம் பேட்டி அளித்தார். அன்று இரவுதான் அவரை சிபிஐ சுவரை எகிறி குதித்து கைது செய்தது. இத்தனை நாட்கள் கழித்து ப. சிதம்பரம் பெயிலில் வெளியே வந்துள்ளார்.

    நேற்று வெளியே வந்த அவர் இன்று டெல்லியில் செய்ய்தியாளர்களை சந்தித்தார். தன்னுடைய 106 கோபத்தை அவர் மொத்தமாக பேட்டியில் வெளிப்படுத்தினார்.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இந்த பேட்டியில் ப. சிதம்பரம் அதிகம் குறி வைத்தது பொருளாதார சீரழிவு குறித்துதான். பொருளாதாரத்தில் என்ன பிரச்சனை எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது. அரசின் திட்டங்கள் எப்படி சொதப்பி உள்ளது. இதில் இருந்து மீளுவது எப்படி கஷ்டம், ஜிஎஸ்டி ஏன் தவறானது என்று குறித்தெல்லாம் அவர் பேசினார்.

    மிக முக்கியம்

    மிக முக்கியம்

    அதேபோல் மிக முக்கியமாக நிர்மலா சீதாராமன் குறித்து மிக கடுமையான அவர் பேசினார். இந்த பொருளாதார சரிவிற்கு நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு பொருளாதாரம் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. ஒரு பிரச்சனை தெரிந்தால்தான் அதை தீர்க்க முடியும். ஆனால் அது நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை.

    மிக மோசம்

    மிக மோசம்

    அவரின் திட்டங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை என்றார். அதோடு ப. சிதம்பரம் பிரதமர் மோடியையும் விட்டு வைக்கவில்லை. பிரதமர் மோடி தொடர்ந்து பொருளாதார சரிவு குறித்து அமைதி காத்து வருகிறார்.தன்னுடைய அமைச்சர்கள் எல்லோரிடம் அவர் இது தொடர்பாக பதில் அளிக்க சொல்லிவிட்டார்.அவர்களும் பொருளாதார சீர் குலைவு குறித்து ஏதாவது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள், என்றார்.

    காஷ்மீர் எப்படி

    காஷ்மீர் எப்படி

    மேலும் காஷ்மீர் குறித்தும் ப. சிதம்பரம் பேசினார்.காஷ்மீர் மக்கள் குறித்து நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் அவர்களுக்காக வேண்டிக்கொண்டு இருக்கிறேன். திமிர்த்தனமாக எடுக்கப்பட்ட முடிவுதான் காஷ்மீர் பிரிவினை. 75 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை பாஜக பறித்துள்ளது., என்றார்.

    மீடியா எப்படி

    மீடியா எப்படி

    முக்கியமாக அரசை நினைத்து மீடியாக்களும் பயப்படுகிறது.நாங்கள் உங்கள் பக்கத்தை படிக்கிறோம், ஆனால் அதில் உண்மை இல்லை.நீங்கள் இப்படி பயப்பட கூடாது. உங்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம் என்றார்.

    எப்படி சிக்கல்

    எப்படி சிக்கல்

    அதோடு ஜேஎன்யூ விவகாரத்தில் மாணவர்களின் நிலைப்பாடு சரியானது. ஜேஎன்யூ மாணவர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். அவர்கள் தங்கள் படிப்பிற்குத்தான் பணம் கேட்கிறார்கள் என்று மாணவர்கள் பிரச்சனை குறித்தும் பேசினார்.

    பெண்கள் எப்படி

    பெண்கள் எப்படி

    மேலும், இந்தியாவில் பெண்கள் கொலை செய்யப்படுவது குறித்து நான் அவமானப்படுகிறேன். எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாம் எங்கே செல்கிறோம். இதை எல்லாம் செய்துவிட்டு நாம் தப்பித்து சென்று விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அச்சமும் கிடையாது, என்று குறிப்பிட்டார்.

    ஒரே பேட்டி

    ஒரே பேட்டி

    இப்படி ஒரே பேட்டியில் கடந்த 106 நாட்களில் நடந்த பிரச்சனை அனைத்தையும் ப. சிதம்பரம் பேசிவிட்டார். அரசு மீது புகார் வைத்து பேசிக்கொண்டே இருக்கிறார் என்பதால்தான் அவரை கைது செய்தனர் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் அதை பற்றி கவலை கொள்ளாமல் பெயிலில் வெளியே வந்ததும் அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    கடுமையான விமர்சனம்

    கடுமையான விமர்சனம்

    அரசை விமர்சனம் செய்த டி கே சிவக்குமார், ராகுல் காந்தி எல்லாம் அமைதி காத்து வருகிறார்கள். ஆனால் அவர்களை போல அல்லாமல் மிகவும் தைரியமாக மக்கள் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி உள்ளார். 106 ஜெயிலில் இருந்த எந்த சுவடும் இல்லாமல் அவர் புள்ளி விபரங்களை புட்டு புட்டு வைத்தார்.

    கடைசியாக

    கடைசியாக

    கடைசியில் முத்தாய்ப்பாக நான் மேலும் வலிமை அடைந்துள்ளேன். நான் மரக்கட்டிலில் படுத்து தூங்கினேன். அது எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.என் உடல் அதனால் அதிகம் வலு அடைந்தது.என் கழுத்து வலுவாக இருக்கிறது. என் தலை வலுவாக இருக்கிறது. என் முதுகெலும்பு வலுவாக இருக்கிறது, என்று குறிப்பிட்டார்.

    வந்துவிட்டார்

    வந்துவிட்டார்

    இதன் மூலம் 106 நாட்களுக்கு முன் சிறைக்கு சென்றவர், முடங்கி போகாமல் மீண்டும் திரும்ப வந்துள்ளார். இந்த முறை இன்னும் கோபமாக வந்துள்ளார். இவரின் அடுத்தகட்ட அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கும்.என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+