டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திகார் சிறையிலிருந்து வரும்போது ஆல் டைம் ஃபேவரைட்டுடன் வெளியே வந்த ப சிதம்பரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    SC grants bail to P Chidambaram in INX Media case : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்

    டெல்லி: டெல்லி திகார் சிறையிலிருந்து வெளியே வந்த ப சிதம்பரம் தனக்கு மிகவும் பிடித்தமான திருக்குறள் நூலுடன் வெளியே வந்தார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மோசடி புகார் தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சிபிஐ கஸ்டடியில் இருந்து வந்த நிலையில் அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலிருந்து அவர் சிறைக்கு செல்லும் போது மருந்து மாத்திரை, மூக்குக் கண்ணாடி உள்பட தனக்கு தேவையான பொருட்களுடன் சென்ற ப சிதம்பரம் எப்போதும் தனக்கு பிடித்த புத்தகமான திருக்குறளையும் கொண்டு சென்றார்.

    ஹைதராபாத் மருத்துவர் கொலை.. அதிர்ச்சி அளிக்கிறது.. பிரஸ் மீட்டிலேயே உணர்ச்சி வசப்பட்ட ப.சி.. வீடியோ ஹைதராபாத் மருத்துவர் கொலை.. அதிர்ச்சி அளிக்கிறது.. பிரஸ் மீட்டிலேயே உணர்ச்சி வசப்பட்ட ப.சி.. வீடியோ

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம்

    இதைத் தொடர்ந்து அவ்வப்போது ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு தாக்கல் செய்தும் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே சிபிஐ கைதுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சிதம்பரத்திற்கு நீதிமன்ற அறையில் கம்பராமாயண புத்தகத்தை கொடுத்தார் அவரது மனைவி நளினி சிதம்பரம்.

    சிதம்பரம்

    சிதம்பரம்

    இந்த நிலையில் 100 நாட்களுக்கு மேல் சிறையிலிருந்த அவரது ஜாமீன் மனு மீது நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறை சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் சிதம்பரம் வெளியே வந்தார்.

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    அப்போது சிறை வாயிலில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் சிதம்பரம் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். அப்போது அவரது கையில் சிகப்பு நிற அட்டையிலான ஒரு புத்தகத்தை வைத்திருந்தார்.

    பிடித்தமான நூல்

    பிடித்தமான நூல்

    நர்மதா பதிப்பகத்தின் பதிப்பில் உருவான திருக்குறள் புத்தகத்தைதான் அவர் வைத்திருந்தார். சிதம்பரத்திற்கு மிகவும் பிடித்தமான நூல் என்றால் அது திருக்குறள்தான். இந்த பதிப்பகத்தின் நூலில் தமிழில் எளிய நடையில் திருக்குறளுக்கான விளக்கம் எழுதப்பட்டிருக்கும். நல்லாட்சி முதல் விவசாயம் வரை அவ்வப்போது நாடாளுமன்றத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் திருக்குறளை சிதம்பரம் சுட்டிக் காட்டுவது வழக்கமான ஒன்றாகும்.

    English summary
    Former Finance Minister P Chidambaram carries his favourite Thirukkural while he gets bail and came out of Tihar Prison.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X