3 "தடித்த" போலீஸ் என்னை நோக்கி ஓடி வந்தனர்.. உடைந்த எலும்போடு.. விளாசிய ப. சிதம்பரம்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று அமலாக்கத்துறைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தனது விலா எலும்பில் சின்ன முறிவு ஏற்பட்டதாக காங்கிரஸ் மூத்த எம்பி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று எலும்பு முறிவோடு தொடந்து விவாத நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை வழக்கில் நேற்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அவரிடம் 9 மணி நேரம் கேள்விகள் கேட்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை, பல்வேறு இடைவெளிகளுடன் இரவு வரை நடைபெற்றது.

எம்பி ராகுல் காந்திக்கு இன்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இன்றும் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

போராட்டம்

போராட்டம்

நேற்று ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுக்க அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் போராட்டம் செய்தனர். டெல்லியில் பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் களமிறங்கி போராட்டங்களை மேற்கொண்டனர். அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் போலீசார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். இதில் எம்பி ப. சிதம்பரம் விலா எலும்பு முறிந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. அதேபோல் கேசி வேணுகோபால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

ப. சிதம்பரம்

ப. சிதம்பரம்

3 பெரிய போலீஸ் என்னை நோக்கி வந்து வேகமாக மோதினார். அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்தேன். சிறிய எலும்பு முறிவு மட்டும் இருப்பதாக சந்தேகப்படுகிறேன். எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தால்.. அது சரியாக எப்படியும் 10 நாட்களாவது ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். நான் இப்பொது நலமுடன் இருக்கிறேன். நாளை எப்போதும் போல என்னுடைய பணிக்கு திரும்புவேன், என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

விவாதம்

விவாதம்

இந்த நிலையில் உடைந்ததாக கூறப்படும் எலும்போடு நேற்று ப. சிதம்பரம் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2க்கும் மேற்பட்ட விவாத நிகழ்ச்சிகளில் நேற்று ஆங்கில ஊடகங்களில் இந்த போராட்டம் பற்றி பேசினார். நேஷனல் ஹெரால்ட் வழக்கு குறித்து விளக்கமாக பேசினார். அதோடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அமலாக்கத்துறை அழுத்தங்களுக்கு எதிராக போராடும் என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டார். v

வழக்கு காமெடி

வழக்கு காமெடி

தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசியவர், எப்ஐஆரில் யார் மீது தவறு, என்ன தவறு என்று எங்காவது கூறப்பட்டு இருக்கிறதா. எப்ஐஆர் எங்கே? scheduled offence தொடர்பாக இந்த வழக்கில் எங்கும் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. அதன்பின்புதான் பிஎம்எல்ஏ (கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவது) விசாரணை நடத்தப்பட வேண்டும். scheduled offence ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்படாத நிலையில் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவது பற்றி விசாரணை செய்யவே முடியாது. இந்த வழக்கு சிரிக்குப்படியாக இருக்கிறது.

வருமான வரி வழக்கு

வருமான வரி வழக்கு

வருமான வரி புகாருக்கு கீழ் இந்த வழக்கை பதிவு செய்யவே முடியாது. ஏதாவது புகார் இருந்தால் நீங்களே சொல்லுங்கள்.. சிபிஐ, டெல்லி போலீஸ் யாராவது இதில் எப்ஐஆர் பதிவு செய்து உள்ளார்களா? சொல்லுங்கள். இந்த வழக்கில் தவறான பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதற்கு என்ன ஆதாரம். எல்லா பரிவர்தனையும் வெளிப்படையாக நடந்துள்ளது. எங்கே முறைகேடு நடந்தது என்று காட்டுங்கள், என்று ப. சிதம்பரம் கோபமாக விவாதத்தில் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+