டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் கோரிக்கை மனு மீதான விசாரணை இன்னும் சில நிமிடங்களில் உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவரின் காவல் இன்றோடு முடிகிறது.
இதையடுத்து அவரது கஸ்டடியை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைக்க உள்ளது. இதே வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறையும் முயன்று வருகிறது. இதையடுத்து சிபிஐ நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ப. சிதம்பரம் சார்பாக ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்க உள்ளது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
Aug 26, 2019, 5:13 pm IST
ப.சிதம்பரத்திற்கு மேலும் 4 நாள் சிபிஐ காவல் - டெல்லி சிபிஐ நீதிமன்றம்
Aug 26, 2019, 5:13 pm IST
ப. சிதம்பரத்திற்கு 30ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
Aug 26, 2019, 5:12 pm IST
ப. சிதம்பரத்திற்கு 5 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் - சிபிஐ
Aug 26, 2019, 5:12 pm IST
ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? : இன்னும் 30 நிமிடத்தில் உத்தரவு.
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் 30 நிமிடத்தில் உத்தரவு.
Aug 26, 2019, 4:24 pm IST
ப. சிதம்பரத்திற்கு 5 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும்.
சிபிஐ தரப்பு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை.
Aug 26, 2019, 4:09 pm IST
5 நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரம் ஆஜர்.
காவலை நீட்டிக்கக்கோரி சிபிஐ தரப்பில் முறையிடப்பட உள்ளதாக தகவல்.
Aug 26, 2019, 4:07 pm IST
டெல்லி: சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மீண்டும் ஆஜர்
Aug 26, 2019, 3:55 pm IST
நாளை மதியம் 12 மணி வரை ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை.
இன்றோடு தடை முடியும் நிலையில் நாளை மதியம் வரை தடை நீட்டிப்பு.
Aug 26, 2019, 3:55 pm IST
ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீட்டிப்பு - உச்ச நீதிமன்றம்
Aug 26, 2019, 3:40 pm IST
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சற்று நேரத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்
Aug 26, 2019, 3:30 pm IST
டெல்லி ஹைகோர்ட் நீதிபதி எப்படி ப. சிதம்பரம் தவறு செய்தார் என்று கூறலாம் - கபில் சிபல்.
எதை வைத்து அவர் பெயிலை மறுத்தார் ? - கபில் சிபல்.
Aug 26, 2019, 3:30 pm IST
நீங்கள் ஹைகோர்ட் நீதிபதியை விமர்சிக்க கூடாது - சிபிஐ தரப்பு
Aug 26, 2019, 3:30 pm IST
ஹைகோர்ட் நீதிபதி தனது மூளையை பயன்படுத்தவில்லை என்று நான் சொல்ல கூடாதா? - கபில் சிபல்,
நீங்கள் தனிப்பட்ட முறையில் யாரை குறித்தும் விமர்சிக்க கூடாது - சிபிஐ தரப்பு,
Aug 26, 2019, 3:25 pm IST
ஐஎன்எக்ஸ் வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது - கபில் சிபல்
இனிமேல் ஏன் இதில் சிபிஐ காவலில் விசாரிக்க கேட்கிறது - கபில் சிபல்
உள் விஷயங்களுக்காக சிபிஐ விசாரணை கேட்கிறது - சிபிஐ தரப்பு
இன்னும் இதில் சில விஷயங்களை விசாரிக்க வேண்டும் - சிபிஐ
Aug 26, 2019, 3:03 pm IST
ஒரே நேரத்தில் இரண்டு வழக்குகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது
Aug 26, 2019, 3:00 pm IST
ப. சிதம்பரத்திற்காக கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகிறார்.
சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரத்திற்காக அபிஷேக் மனு சிங்வி வாதிடுகிறார்.
Aug 26, 2019, 2:59 pm IST
டெல்லி சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை சற்று நேரத்தில் துவங்குகிறது.
ப. சிதம்பரம் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணை.
Aug 26, 2019, 2:52 pm IST
ஆனால் சிபிஐ அதையும் மீறி அவரை கைது செய்துள்ளது.
ஒருமுறை உங்களை கைது செய்துவிட்டால் உலகம் உங்களை தவறாக பார்க்கும்.
உங்களை எல்லோரும் குற்றவாளி போல பார்ப்பார்கள் - கபில் சிபல்.
Aug 26, 2019, 2:51 pm IST
ப. சிதம்பரத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று கைது செய்துள்ளனர்.
அவரின் கைது நடவடிக்கை நிகழ்ந்ததே அதை மனதில் வைத்துதான் - கபில் சிபல்.
Aug 26, 2019, 2:50 pm IST
ப. சிதம்பரத்திற்கு தெரியாமல் பல ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
எந்த வழக்கிலும் இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது - கபில் சிபல்.
Aug 26, 2019, 2:39 pm IST
ப. சிதம்பரத்தை தவிர இந்த வழக்கில் எல்லோரும் பெயிலில் இருக்கிறார்கள்.சிலருக்கு அவர்கள் கேட்காமலே பெயில் வழங்கப்பட்டுள்ளது - கபில் சிபல்.
Aug 26, 2019, 2:37 pm IST
ப. சிதம்பரம் வழக்கு: கபில் சிபல் தனது வாதத்தை தொடர்கிறார்.
உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.
Aug 26, 2019, 1:11 pm IST
உணவு இடைவேளைக்காக ப. சிதம்பரம் வழக்கு ஒத்தி வைப்பு
Aug 26, 2019, 1:08 pm IST
வழக்கின் முழு விபரங்களை கபில் சிபல் தாக்கல் செய்து வருகிறார்
Aug 26, 2019, 12:50 pm IST
இதுதான் சிபிஐ விசாரணை நடத்திய லட்சணம் - கபில் சிபல்
Aug 26, 2019, 12:50 pm IST
சிதம்பரத்திடம் 17 வங்கி கணக்கு இருப்பதாக அமலாக்கத்துறை சொல்கிறது.
ஆனால் சிதம்பரத்திடம் அது தொடர்பாக ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை - கபில் சிபல்.
Aug 26, 2019, 12:49 pm IST
சிதம்பரத்திடம் வங்கி கணக்குகள் குறித்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை .
அவரிடம் டிவிட்டர் கணக்கு இருக்கிறதா என்று மட்டும்தான் கேட்டுள்ளனர் - கபில் சிபல்
Aug 26, 2019, 12:49 pm IST
சிதம்பரத்திற்கு எதிராக இந்த வழக்கில் ஒரு ஆதாரம் காட்டுங்கள் - கபில் சிபல்
Aug 26, 2019, 12:49 pm IST
சிதம்பரத்திற்கு எதிராக ஒரு ஆதாரம் இருந்தால் கூட என் வழக்கை வாபஸ் பெறுகிறேன் - கபில் சிபல்
Aug 26, 2019, 12:45 pm IST
உச்ச நீதிமன்றத்தில் கேஸ் டைரியை ஆதாரமாக அளித்து இருக்கிறார்கள் - கபில் சிபல்
READ MORE
10:35 AM, 26 Aug
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? : இன்னும் சற்று நேரத்தில் விசாரணை.
சிபிஐ நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு.
உச்ச நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
11:04 AM, 26 Aug
ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு வருவதில் சிக்கல்
11:04 AM, 26 Aug
மனுவை இன்று பட்டியலிடவில்லை என சிதம்பரம் தரப்பு வாதம்.
தலைமை நீதிபதி உத்தரவு படியே வழக்குகள் பட்டியலிடப்படுகிறது - நீதிபதி பானுமதி.
11:07 AM, 26 Aug
சிபிஐ காவலுக்கு எதிரான மனுவை இன்று விசாரிக்க ஆட்சேபம் இல்லை - சிபிஐ
11:07 AM, 26 Aug
சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை மீண்டும் பரிசீலனை செய்ய நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு
11:20 AM, 26 Aug
சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை பிரமாண பத்திரம் தாக்கல்
11:22 AM, 26 Aug
சிதம்பரத்திற்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளது - அமலாக்கத்துறை.
பிரான்ஸ், சிங்கப்பூர், பிரிட்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சொத்துக்கள் உள்ளன.
வெளிநாடுகளில் வங்கி கணக்குகள் உள்ளன - பிரமாண பத்திரத்தில் தகவல்.
12:02 PM, 26 Aug
ப. சிதம்பரம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிரான இரண்டு மனுக்கள் மீது விசாரணை.
12:06 PM, 26 Aug
சிதம்பரத்திற்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது - கபில் சிபல்
12:06 PM, 26 Aug
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் முன் சிதம்பரத்தை கைது செய்தது தவறு - கபில் சிபல்
12:07 PM, 26 Aug
சிதம்பரத்தின் மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் முன்பே கைது செய்துவிட்டனர் - கபில் சிபல்
12:10 PM, 26 Aug
நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின் கைது செய்வது நீதிக்கு எதிரானது - கபில் சிபல்
12:10 PM, 26 Aug
சிதம்பரம் வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது - கபில் சிபல்.
ஆனால் விசாரணைக்கு முன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12:13 PM, 26 Aug
நீதிமன்றத்தை மீறி இந்த கைது நடந்துள்ளது: இந்த கைதே தவறானது - கபில் சிபல்
12:15 PM, 26 Aug
ஆனால் அனைத்தையும் மீறி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் - சிங்வி
12:15 PM, 26 Aug
உச்ச நீதிமன்றம் கூறியது சிபிஐ தரப்பு வழக்கறிஞருக்கும் தெரியும் - சிங்வி
12:15 PM, 26 Aug
முன் ஜாமீன் மனுவை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது எல்லோருக்கும் தெரியும் - சிங்வி
12:15 PM, 26 Aug
ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
12:16 PM, 26 Aug
முன் ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.
கைது செய்யப்பட்டுவிட்டதால் முன் ஜாமீன் வழக்கை விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்.
12:26 PM, 26 Aug
அமலாக்கத்துறைக்கு எதிரான ப. சிதம்பரத்தின் மனு மீது தற்போது விசாரணை.
முதல் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 2வது மனு மீது விசாரணை.
12:29 PM, 26 Aug
என்ன ஆதாரம் என்றே தெரியாமல் நான் எப்படி வாதாட முடியும் - கபில் சிபல்
12:29 PM, 26 Aug
சீலிட்ட ஆதாரத்திற்கு எதிரான நான் எப்படி வாதாட முடியும் - கபில் சிபல்
பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை தரப்பு கசியவிட்டு இருக்கிறது - கபில் சிபல்.
பிரமாண பத்திரம் மீடியாக்களில் வெளியாகி உள்ளது - கபில் சிபல்.
கபில் சிபல் வாதத்தால் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு.
12:39 PM, 26 Aug
நாங்கள் பிரமாண பத்திரத்தை கசிய விடவில்லை - சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா.
12:40 PM, 26 Aug
நீங்கள் இங்கு அரசியல் பேச வேண்டாம் - துஷார் மேத்தா
12:40 PM, 26 Aug
பிரமாண பத்திரத்தை டிவி சேனல்களில் கசியவிட்டுவிட்டனர் - கபில் சிபல்.
அதை பற்றிய டிவி விவாதத்தில் ப.சிதம்பரம் தரப்பு கலந்துகொண்டது - துஷார் மேத்தா.
கபில் சிபல் துஷார் மேத்தா இருவரும் மாறி மாறி வாதம்.
12:45 PM, 26 Aug
அவரை காவலில் எடுத்துவிட்டு எதுவுமே விசாரிக்கவில்லை - கபில் சிபல்
12:45 PM, 26 Aug
கடந்த 5 நாட்களாக ப. சிதம்பரத்திடம் சிபிஐ கேள்வியே கேட்கவில்லை - கபில் சிபல்
12:45 PM, 26 Aug
கேஸ் டைரியை ஆதாரமாக அளிக்க சட்டத்தில் இடமில்லை - கபில் சிபல்