சிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும்.. உச்ச நீதிமன்ற படியேறிய ப. சிதம்பரம் தரப்பு.. அதிரடி மனு!
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சிபிஐ காவலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல்நாள் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிற்குள் சுவர் எகிறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.

இதையடுத்து நேற்று மதியம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார்.
அதேபோல் ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த மாதம் 26ம் ப.சிதம்பரம் சிபிஐ மூலம் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்படுவார்.
இந்த நிலையில் இந்த உத்தரவிற்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் அளிக்கப்பட்டது தவறானது என்று கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை திங்கள் கிழமை நடக்க உள்ளது.
ஏற்கனவே ப. சிதம்பரத்தை திங்கள் கிழமை வரை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் மீதான அடுத்தகட்ட விசாரணை திங்கள் கிழமை நடக்கிறது. இந்த விசாரணையுடன் சேர்த்து சிபிஐ காவலுக்கு எதிரான விசாரணையும் நடக்க உள்ளது.
தற்போது திங்கள் கிழமை வரைதான் ப. சிதம்பரத்திற்கு இடைக்கால முன் ஜாமீன் கிடைத்துள்ளது. அதை நீட்டிக்க கோரி ப. சிதம்பரம் தரப்பு திங்கள் கிழமை கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications