பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் போடப்பட்டதுதான் மத்திய பட்ஜெட்... ப.சிதம்பரம் சொல்கிறார்!
டெல்லி: மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் போடப்பட்ட பணக்காரர்களின் பட்ஜெட் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேசினார்.
கொரோனாவுக்கு முன்பே 2 ஆண்டுகளாக மந்தநிலை இருந்தது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக, செயல்திறனற்ற பொருளாதார நிர்வாகம் நிலவியது என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யு.மான ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-இந்த பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். இது பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால் போடப்பட்ட பணக்காரர்களின் பட்ஜெட். அதாவது, நாட்டின் 73 சதவீத செல்வ வளங்களை வைத்துள்ள 1 சதவீதம் பேருக்கான பட்ஜெட். இதில் ஏழைகளுக்கு எதுவும் இல்லை. ஏழைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.
பொருளாதார மந்தநிலை இல்லை என்று மத்திய அரசு மறுத்து வருகிறது.கொரோனாவுக்கு முன்பே 2 ஆண்டுகளாக மந்தநிலை இருந்தது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக, செயல்திறனற்ற பொருளாதார நிர்வாகம் நிலவியது. பொருளாதாரத்தை உயர்த்த தேவையை அதிகரிக்க வேண்டும் என்று உலக பொருளாதார வல்லுனர்கள் பலர் கூறுகிறார்கள். தேவையை அதிகரிக்க ஏழைகள் கையில் பணத்தை கொடுக்க வேண்டும். அதை அரசு செய்ய தவறி விட்டது.
கடந்த 36 ஆண்டுகால அனுபவத்தில் இருந்து நீங்கள் இன்னும் பாடம் கற்கவில்லை. அதனால் மேலும் 12 மாதங்கள் வீணாக போகப்போகிறது. ஏழைகள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று ப.சிதம்பரம் பேசினார்.












Click it and Unblock the Notifications