சூரத் கோர்ட் தீர்ப்பில் இருந்த "பிழை.." ராகுல் காந்தி எப்போது நாடாளுமன்றம் வருவார்! ப.சிதம்பரம் பரபர
டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து இதில் என்ன நடக்கும் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் சில முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "மோடி" எனப் பெயர் வைத்த அனைவரும் ஒரே போல இருப்பதாகக் கூறி ஒரு சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார்.

இதை எதிர்த்து குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்தார்.
ப. சிதம்பரம்: இது தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்த நிலையில், ராகுல் காந்தியின் தண்டையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக தொடர்வார். இதற்கிடையே இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா சபாநாயகர் உடனடியாக ராகுல் காந்தியை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியுள்ளோம். தண்டனையை ஏற்கனவே நிறுத்தியிருந்தார்கள். இப்போது கன்விக்ஷன் எனப்படும் குற்றவாளியாக அறிவித்ததையும் நிறுத்தி வைத்துள்ளார்கள். அதாவது தற்போது கன்விக்ஷன் இல்லை. இதில் இறுதித் தீர்ப்பு இனிமேல் வரும்.
நிறுத்தி வைப்பு: இருப்பினும், இப்போது கன்விக்ஷன் இல்லை என்பதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும் அரசியல் சாசனத்தின் படியும் அவரை லோக்சபா உறுப்பினரில் இருந்து நீக்கியது இனி செல்லாது. அதை நிச்சயம் சபாநாயகர் உணர்ந்து, ராகுல் காந்தி எம்பியாக தொடர ஆணை பிறப்பிப்பார் என நம்புகிறேன்.

பாஜக ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். இந்தியக் குற்றவியல் சட்டம் 162 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தண்டனை என்பது அதில் தான் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை வாய்மொழி அவதூறுக்காக எந்தவொரு நபருக்காவது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதா? இதை நான் தொடர்ந்து கேட்டு வருகிறோம்..
162 ஆண்டுகளில் முதல்முறை: நாங்கள் ஆராய்ந்த வரை 162 ஆண்டுகளில் இதுபோன்ற வழக்குகளில் எந்தவொரு நீதிமன்றமும் 2 ஆண்டுகள் என அதிகபட்ச தண்டனை விதித்தே இல்லை. எப்போதும் நாட்கள் அல்லது ஒரு மாதம்.. இல்லையென்றால் 5 ஆயிரம் அபராதம் என்றே தீர்ப்பு இருக்கும். 2 ஆண்டுகள் தண்டனை என்றால் அதுவே பிழை. அதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டிய காரணம் என்ன என்பதை சூரத் நீதிமன்றம் விளக்கவில்லை என்பதையும் சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பை இன்றோ நாளையோ சபாநாயகருக்கு அனுப்புவோம். திங்கள் கிழமை இது குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் என்று நினைக்கிறேன். சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார். அதன் பின்னரே அவர் நாடாளுமன்றத்திற்கு வருவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications