"பகல் கொள்ளை".. மொத்தம் 20 கேள்விகள்.. பொதுதுறைகளை விற்கும் முடிவு குறித்து ப.சிதம்பரம் கிடுக்கிபிடி
ப சிதம்பரம் மத்திய அரசுக்கு 20 கேள்விகளை முன்வைத்துள்ளார்
டெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுகூட, இழப்பில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்களைத்தான் விற்பனை செய்தது... ஆனால், இப்போது அதற்கு நேர்மாறாக மோடி அரசு இருக்கிறதே.. காங்கிரஸ் அரசு எப்போதுமே நாட்டின் நிலையான சொத்துகளை விற்றதே கிடையாது.. அதனால் பொதுத்துறைகளை விற்கும் மத்திய அரசு இதை பற்றி விளக்க வேண்டும் என்றும், தேசிய பணமாக்கல் திட்டத்தின் (என்எம்பி) நோக்கங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு, தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது... அதாவது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளைக் குத்தகைக்கு விடும் திட்டம்தான் இந்த தேசிய பணமாக்கல் பைப்லைன் திட்டம்...
கடந்த மாதம் 23-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.. இந்த திட்டத்தின்படி சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், சுரங்கம், எரிவாயு குழாய் ஆகிய அரசின் சொத்துகள் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்படவுள்ளன.

இலக்கு
இதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், மின்சார கட்டமைப்பு, மின் உற்பத்தி நிலையங்கள், தொலைத் தொடர்பு, தானியக் கிடங்குகள், சுரங்கங்கள், பெட்ரோலிய நிலையங்கள், இயற்கை எரிவாயு என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை அனைத்துமே தனியாருக்கு விற்கப்படுவதற்காக சூழலும் ஏற்பட்டுள்ளது.. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன..

கண்டனம்
ஏற்கனவே ராகுல்காந்தி "70 வருஷமாக உருவாக்கப்பட்ட சொத்துக்களை விற்பதா? என்று கேள்வி கேட்டிருந்தார்.. அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன், மேலும் சில கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.. மொத்தம் 20 கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு மத்திய அரசை திணறடித்துள்ளார் சிதம்பரம். செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசியபோது சொன்னதாவது:

சந்தேகம்
''மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த தேசிய பணமாக்கல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.. மேலும் இந்த அறிவிப்பு சம்பந்தமாக சில சந்தேகமும் உள்ளது.. அடுத்த 4 வருடங்களில் சில சொத்துகளில் இருந்து ரூ.6 லட்சம் கோடி வருவாயை எடுக்க போவதாக அரசு சொல்கிறது.. ஆனால், மத்திய அரசு அடையாளம் கண்டுள்ள அந்த சொத்துகள் இப்போதே வருடந்தோறும் வருவாய் ஈட்டி கொண்டுதான் இருக்கின்றன...

வேறுபாடுகள்
அப்படியானால், நடப்பாண்டில் வெளியிடப்படாத அந்த வருவாய்க்கும், அடுத்த 4 வருடங்களில் கிடைக்கும் ரூ.6 லட்சம் கோடிக்கும் இடையிலான வருவாய் வேறுபாட்டை அரசு மதிப்பிட்டதா? ஒருவேளை மதிப்பிட்டிருந்தால், அடுத்த 4 வருடங்களில் ஒவ்வொரு வருடத்துக்கும் வருவாய் வேறுபாடுகள் எவ்வளவு? ஒருவேளை குத்தகைக்கு விடாமல் இருந்தால், ஆண்டு வருவாய் எவ்வளவு? குத்தகைக்கு விடப்பட்டால் அந்த வருமானம் எவ்வவளவு என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும்...

உள்கட்டமைப்பு திட்டம்
தேசிய உள்கட்டமைப்பு திட்டத்துக்கு ரூ.100 லட்சம் கோடி தேவை என்கிறார்கள்.. இவர்கள் சொல்லும்படியே வைத்து கொண்டாலும், அடுத்த 4 வருடங்களில் திரட்டப்படும் இந்த ரூ.6 லட்சம் கோடி எந்த அளவுக்கு தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்கும்?.. அதேபோல, அந்த ரூ.6 லட்சம் கோடியும் என்னென்ன துறைகளில் இருந்து கிடைக்கிறது என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும்...

மூலதன முதலீடு
அதேபோல, ரூ.6 லட்சம் கோடி கிடைக்கும் என்று அடையாளம் காணப்பட்டு குத்தகைக்கு விடுவதற்கு இருக்கும் சொத்துகளின் ஒட்டுமொத்த மூலதன முதலீடு என்ன என்பதையும் அரசு கூறவேண்டும். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.5.5 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறதே, அதை சரிசெய்ய இந்த தொகை பயன்படுத்தி கொள்ளலாமே? குத்தைக்கு விடுவது உறுதி என்றால், அந்தந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுமா? இட ஒதுக்கீடு முறை அங்கு கடைப்பிடிக்கப்படுமா?

விற்பனை
அன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அரசுக்கு வருமானம் வராத மற்றும் இழப்பில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்களைத்தான் விற்பனை செய்தது... ஆனால், இப்போது அதற்கு நேர்மாறாக மோடி அரசு உள்ளது.. காங்கிஸ் அரசு எப்போதுமே நாட்டின் நிலையான சொத்துகளை விற்றதே கிடையாது..

மோடி அரசு
துறைமுகம், ஏர்போர்ட் தொலைத்தொடர்பு, மின்துறை போன்றவற்றில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கத்தில் உள்ளதே.. அவைகளை தடுத்த நிறுத்த ஏதாவது வழி இருக்கிறதா? கட்டமைக்க 70 வருட காலம் காலம் ஆனது.. அந்த சொத்துகளை பகல் கொள்ளையடிக்க மோடி அரசு என்ன ஐடியா கைவசம் வைத்துள்ளது?

பகல் கொள்ளை
இப்போது விற்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துகள் மூலம் ரூ.1.30 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது... இதையே தனியாருக்கு விற்பனை செய்தால், ரூ.1.50 லட்சம் கோடி கிடைக்கும்... அதாவது, அரசுக்கு ரூ.20 லட்சம் கோடிதான் கிடைக்கும்.. இதுக்காகவா, 70 வருடமாக பாடுபட்டு கட்டமைத்த நிறுவனங்களை விற்க போகிறார்கள்? இது பகல் கொள்ளை இல்லையா?

விற்பனை
கொங்கன் ரயில்வே - டெல்லி மும்பை சரக்க போக்குவரத்து பாதையை விற்க உள்ளதாக தெரிகிறது.. ஆனால், இதை பற்றி நாடாளுமன்றத்தில் எதுவுமே பேசவில்லை.. யாரிடமும் விவாதிக்கவில்லை.. ஏன்? 4 வருடத்துக்கு பிறகு அந்த சொத்துகள் மத்திய அரசுக்கே திரும்பி வரும்போது, அவைகளின் மொத்த மதிப்பு என்ன என்பதையும் சொல்ல வேண்டும்? தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கங்கள் என்ன? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

வெற்று காகிதம்
நிதியமைச்சருக்கு எப்படியோ, இந்தியாவில் வேற எங்கியாவது சொந்த வீடு இருக்குமே.. அந்த வீட்டை எனக்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடுவார் என்று வைத்து கொள்ளுங்கள்.. வெற்று காகிதத்தில், அவர்தான் அந்த வீட்டுக்கு ஓனர் என்றும் வைத்து கொள்ளுங்கள்.. 99 வருஷங்களுக்கு பிறகு நான் என்ன அவருக்கு திருப்பி தருவேன்? நான்தான் அந்த வீட்டுக்கு ஓனர் இல்லையே.. அப்படி எப்படி அந்த வீட்டை நான் பராமரிப்பேன்? பழுதுபார்ப்பேன்? அதுமாதிரிதான் இந்த விஷயமும்.. 4 வருடங்கள் குத்ததைக்கு சொத்துகளைத் தனியாரிடம் விட்டால், சொத்தின் உரிமையாளராக அரசு இருக்கும்போது அது பராமரிக்கப்படுமா? பழுது பார்க்கப்படுமா? அதனால், இப்படி சொத்துக்கள் விற்பது குறித்து மக்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்" என்றார்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications