5% தெரியுமா? போகிறபோக்கில் ஜிடிபி சரிவை கிண்டல் செய்த ப. சிதம்பரம்.. என்ன ஒரு தைரியம்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜிடிபி குறித்து இன்று சொன்ன கருத்து ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜிடிபி குறித்து இன்று சொன்ன கருத்து ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை அமலாக்கத்துறை கைது செய்ய செப்டம்பர் 5ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, செப்டம்பர் 5ம் தேதி வரை சிபிஐ காவலை நீட்டித்துள்ளது. ஒரு பக்கம் இந்த வழக்கு நடந்து வர, இன்னொரு பக்கம் சிபிஐ காவல் தொடர்பாக சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, மொத்தமாக தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

செய்தியாளர்கள்
அந்த மனு மீதான விசாரணையும் செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லி சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் ஆஜர் ஆனார். அப்போது அவர் சில நொடிகள் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

என்ன கேள்வி
அப்போது செய்தியாளர்கள் வேகமாக அவரை சூழ்ந்து ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு குறித்து கேட்டனர். ஆனால் அந்த கேள்விகளை காதில் வாங்காத ப. சிதம்பரம், 5% தெரியுமா? உங்களுக்கு 5% என்றால் என்ன நியாபகம் வருகிறது? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
|
சிரிப்பு
இதை கேட்டதும் சில செய்தியாளர்கள் அங்கே சிரிக்க தொடங்கினார்கள். அதன்பின் செய்தியாளர்களை பார்த்து உங்களுக்கு கடந்த காலாண்டின் ஜிடிபி என்னவென்று தெரியுமா? என்று கேட்டார். இதனால் அங்கு பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து அவரை அழைத்து சென்றனர். கடந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பும் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.

என்ன சரிவு
5% என்ற மிக மோசமான நிலையை ஜிடிபி அடைந்தது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து இறங்குமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. சிபிஐ காவலுக்கு இடையிலும் சிதம்பரம் இதை பற்றி பேசி இருப்பது மத்திய அரசை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications