அக்னிபாத் திட்டம்- மத்திய அரசு நெருப்புடன் விளையாடுகிறது.. நிறுத்தி வையுங்க...ப.சிதம்பரம் எச்சரிக்கை
டெல்லி: அக்னிபாத் எனும் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் புதிய திட்டத்தை அமல்படுத்தி இருப்பதன் மூலம் மத்திய பாஜக அரசு நெருப்புடன் விளையாடுகிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
ராணுவப் பணியை 4 ஆண்டுகளாக குறைக்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்துக்கு வட இந்திய மாநிலங்களில் மிகப் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பீகார் மாநிலத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஹரியானாவில் கல்வீச்சு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பீகாரில் பாஜக அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:
அக்னிபாத் திட்டமானது பல்வேறு சர்ச்சைகளைக் கொண்டது; பல்வேறு ஆபத்துகளைக் கொண்டது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு வயது 17 முதல் 21 வரை என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. நாட்டின் பெரும்பகுதியான இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை இது மறுப்பதாக இருக்கிறது.
எல்லையில் நிற்கும் நமது ராணுவத்தினருக்கு எதிர்காலம் குறித்த திருப்திகரமான நம்பிக்கையை நாம் உருவாக்க வேண்டும். அக்னிபாத் போன்ற திட்டங்களை சோதனை முயற்சியாக செயல்படுத்தி பார்த்துவிட்டுதான் நடைமுறைப்பாடுத்தி இருக்கவேண்டும். இத்திட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாகவே எதிர்ப்பு உள்ளது.
ஆகையால் மத்திய அரசானது அக்னிபாத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அவசரகதியில் கொண்டு வந்துள்ளது. அக்னிபாத் திட்டத்தின் மூலமான ராணுவ பயிற்சி என்பது முறையான ராணுவ பயிற்சியை, ராணுவத்தின் பாரம்பரியமான விழுமியங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications